அருள்மிகு பச்சை வண்ணர் மற்றும் பவள வண்ணர் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Pavalavannar And Pachaivannar Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001727]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு விஷ்ணு பகவான் தசாவதாரங்கள் எழுந்தருளியிருக்கிறார். இந்த தசாவதாரங்களில் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு வண்ணமாக பத்து அவதாரங்களில் பத்து வண்ணமாக காட்சி அருளியிருக்கிறார். தசாவதாரங்களில் இராமர் அவதாரத்தில் பச்சைவண்ணமாக காட்சியருளியிருக்கிறார் என்பது பெரியோர்களின் மரபு இப்படி இராமர் அவதாரம் எடுத்ததில் அவர் மனித சுபாவமாக இருந்தார் இறைவன் தான் என்று கூறவில்லை. ஆதலால் ஸ்பத ரிஷிகளில் மரீஷீ ரிஷி என்பவர் ராம அவதாரத்தில் ஏன் மனித சுபாவத்தில் இருந்தார் பகவான் என்று நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகம் கொண்டு தவம் செய்து பெருமாளை பிரார்த்தித்தார் எனவே, அவருக்காக பச்சைநிற மேனியாக வில் அம்புடன் இராமராக காட்சியருளினார். சாட்சாத் இராம அவதாரம் எடுத்தது விஷ்ணுதான் என்று அதே பச்சைநிறத்துன் சங்கு சக்ரதாரியாக விஷ்ணு...அருள்மிகு விஷ்ணு பகவான் தசாவதாரங்கள் எழுந்தருளியிருக்கிறார். இந்த தசாவதாரங்களில் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு வண்ணமாக பத்து அவதாரங்களில் பத்து வண்ணமாக காட்சி அருளியிருக்கிறார். தசாவதாரங்களில் இராமர் அவதாரத்தில் பச்சைவண்ணமாக காட்சியருளியிருக்கிறார் என்பது பெரியோர்களின் மரபு இப்படி இராமர் அவதாரம் எடுத்ததில் அவர் மனித சுபாவமாக இருந்தார் இறைவன் தான் என்று கூறவில்லை. ஆதலால் ஸ்பத ரிஷிகளில் மரீஷீ ரிஷி என்பவர் ராம அவதாரத்தில் ஏன் மனித சுபாவத்தில் இருந்தார் பகவான் என்று நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகம் கொண்டு தவம் செய்து பெருமாளை பிரார்த்தித்தார் எனவே, அவருக்காக பச்சைநிற மேனியாக வில் அம்புடன் இராமராக காட்சியருளினார். சாட்சாத் இராம அவதாரம் எடுத்தது விஷ்ணுதான் என்று அதே பச்சைநிறத்துன் சங்கு சக்ரதாரியாக விஷ்ணு ரூபமாக காட்சியருளினார். அதனால் இப்பெருமாள் அருள்மிகு பச்சைவண்ணர் என்ற திருநாமத்துடன் போற்றப்படுகிறார். வடமொழியில் மரகதவண்ணர் என்றும் கூறுவர். இங்கு நவகிரகங்களில் புதனுக்கு அதிதேவதையாக விஷ்ணு போற்றப்படுகிறார். விஷ்ணு பகவான் பச்சை நிறத்தில் அருள்பாலிப்பதால் புதனுடைய நிறமும் பச்சையாகும். ஆகவே புதன் தோஷம் உள்ளவர்கள் புதனன்று இப்பெருமாளை அர்ச்சனை செய்து வணங்கினால் புதன் தோஷம் நீங்கி சுபிக்ஷம் பெறுவார்கள். இக்கூற்றை சுகர் நாடி ஜோதிடத்திலும், ஓலை சுவடிஜோதிடத்திலும் அகத்தியர் காலத்தில் கூறப்பட்டுள்ளது. என சுகர் நாடி ஜோதிடத்தில் தெரிய வருகிறது. ஆகவே இந்த ஸ்தலம் புதன் பரிகார ஸ்தலம் என்றாகிறது.
இங்கு ராமர் விஷ்ணு ரூபத்தில் எழுந்தருளியிருப்பதால் இங்கு தாயார் மஹாலட்சுமி சீதாதேவியாகவும் கருதப்படுகிறார். பெருமாள் பச்சைவண்ணர் என்ற நாமத்தின் காரணமாக தாயார் மரகதவல்லி என்ற நாமத்தில் போற்றப்படுகிறார். லட்சுமியுடைய மந்திரம் ்ரீஸீக்தம் மந்தரம் அம்மந்திரம் லட்சுமி தாயார் பீடத்தில் யந்திராமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இங்கு தாயார் லட்சுமி ரூபம், சீதாதேவி ரூபம், யந்திரபுர வாஷினி ரூபம் ஆகிய மூன்று ரூபங்கள் இணைந்து ஒரே ரூபமாக மரகதவல்லி தாயாராக எழுந்தருளியுள்ளார்.
அருள்மிகு பவளவண்ணர் திருக்கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதாகவும், காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால் பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார். திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம். பச்சை வண்ணர் கோவில் பாடல் பெற்ற தலமல்ல. இங்கு வரும் பக்தர்கள் பவள வண்ணரை வழிபாடு செய்துவிட்டு பச்சை வண்ணரையும் வழிபட்டுச் செல்வதையே மரபு. அஸ்வினி தேவதைகள் இந்தத் தலத்தில் பெருமாளை வழிபட்டதாக நம்பிக்கை