அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கூரத்தாழ்வார் திருக்கோயில், கூரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Adhikesavaperumal And Koorathalvar Temple, Kooram - 631502, Kancheepuram District [TM001728]
×
Temple History
தல வரலாறு
சைவமதம் அதிகமாக தாக்கம் இருந்தகாலத்தில் ராமானுஜர் எல்லா இடங்களிலும் வைணவ மதத்தை பரப்பிக்கொண்டு இருந்தார் ,இதை அறிந்த சோழ அரசர் இதை எப்படியாவது தடுக்க நினைத்தார் அவருடைய ஆச்சாரியார் ஒட்டக்கூத்தர் ஏற்கனவே ராமானுஜரை பிடிக்காத காரணத்தால் அரசரிடம் வைணவர்களை சைவர்களாக மாற்ற கூறினார் ,வைணவர்கள் அதிகமாக போற்றும் ராமானுஜரை தன் இடத்துக்கு அழைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டால் எல்லாருக்கும் மாறிவிடுவார்கள் என்று எண்ணி காவலர்களை அழைத்து அவரை அழைத்து வர சொன்னார். இதை அறிந்த சிஷ்யர்கள் ராமானுஜரை காப்பாற்ற எண்ணி அவரை ஸ்ரீரங்கம் அனுப்பிவைத்தனர் . கூரத்தாழ்வான் காவேரி கரையில் அவரை போல் உடையணிந்து நின்றிருந்தார் காவலர்கள் அவரிடம் இங்கு யார் ராமானுஜம் என்று கேட்க தனக்கு அரசனால் ஆபத்து ஏற்படும் என்று...சைவமதம் அதிகமாக தாக்கம் இருந்தகாலத்தில் ராமானுஜர் எல்லா இடங்களிலும் வைணவ மதத்தை பரப்பிக்கொண்டு இருந்தார் ,இதை அறிந்த சோழ அரசர் இதை எப்படியாவது தடுக்க நினைத்தார் அவருடைய ஆச்சாரியார் ஒட்டக்கூத்தர் ஏற்கனவே ராமானுஜரை பிடிக்காத காரணத்தால் அரசரிடம் வைணவர்களை சைவர்களாக மாற்ற கூறினார் ,வைணவர்கள் அதிகமாக போற்றும் ராமானுஜரை தன் இடத்துக்கு அழைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டால் எல்லாருக்கும் மாறிவிடுவார்கள் என்று எண்ணி காவலர்களை அழைத்து அவரை அழைத்து வர சொன்னார். இதை அறிந்த சிஷ்யர்கள் ராமானுஜரை காப்பாற்ற எண்ணி அவரை ஸ்ரீரங்கம் அனுப்பிவைத்தனர் . கூரத்தாழ்வான் காவேரி கரையில் அவரை போல் உடையணிந்து நின்றிருந்தார் காவலர்கள் அவரிடம் இங்கு யார் ராமானுஜம் என்று கேட்க தனக்கு அரசனால் ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தும் தான் தான் ராமானுஜர் என்று கூறினார் . அரசபைக்கு கூரத்தாழ்வாரும் ,பெரிய நம்பியும் வந்தனர் ,அரசர் அவரிடம் பத்திரத்தில் சிவனே சிறந்த தெய்வம் என்று எழுதி கையெழுத்து இட சொன்னார் , ஆனால் அவர் இதெற்கு ஆதாரம் கேட்டார் கோபம் உற்ற அரசர் அவரின் கண்களை பிடுங்க சொன்னார் உடனே அவர் உன்னை போல் அரசரின் கைகளால் தண்டனை பெறுவதெற்கு நானே என் கண்களை எடுத்துக்கொள்கிறேன் என்று தன் கண்களை தானே பிடுங்கிவிட்டார் அப்போது அங்கு இருந்த ஒருவர் இவர் ராமானுஜர் இல்லை என்று கூறினார் . 13 வருடங்கள் கண்கள் இல்லாமல் வாழ்ந்தார் பின்பு ராமானுஜர் அவரை சந்தித்து அவருக்காக இறைவனிடம் வேண்டி இறைவன் அவருக்கு கண்கள் தந்ததாக வரலாறு கூறுகிறது .