தல பெருமை
ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரஸ்வாமியை முதன்மையாக கொண்டு எட்டு திக்கிலும் எட்டு சிவலிங்கங்கள் அமைத்து வழிபட்டதில் நிருதி திக்கில் அமைந்துள்ளதால் இறைவனுக்கு நிருதிபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறது. திருஇரும்பூளை என்கின்ற ஆலங்குடி குருஸ்தலத்தின் நிருதி திக்கில் உள்ளதும், இரும்பூளை வனத்தில் ஆதிகால நத்தம் பகுதியாக இருந்து ஆலங்குடி குருஸ்தல பூஜைகள் நடைபெறவும் காரணமாக இருந்ததால் பூலைவனத்தம் என்றுஅழைக்கப்படுகிறது. ஆலங்குடி குருஸ்தலத்தின் அஷ்டதிக்கு ஈஸ்வரர் ஆலயங்களில் நிருதி திக்கில் அமைந்துள்ளது. மனதில் உள்ள பயம், பகைமை ஆகியவட்டறை போக்க கூடிய ஸ்வாமி என்பது குறிப்பிடத்தக்கது