Arulmigu Varadharajaperumal Temple, Povanur - 612803, Thiruvarur District [TM017619]
×
Temple History
தல பெருமை
ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆச்சார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாம பஜனை சம்பிரதாயத்தில் முதல் குரு. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கோவிந்தபுரத்தில் தங்கி இருந்தபோது பக்கத்துக்கு கிராமமாகிய பெரம்பூர் என்னும் கிராமத்திற்கு சென்றார். அங்கே அவரது கனவில் பெருமாள் ஸ்ரீ சீதா -ராமனாக காட்சி கொடுத்தார். அதே நேரம் நான் பூமிக்கடியில் உள்ளேன் என்னை வெளியே எடுத்து எனக்கு கோயில் கட்டி வழிபடுவாய் என்று அசரீரி வாக்கு கேட்டதாம் உடனே ஸ்வாமிகள் தமது பரிவாரங்களுடன் சென்று தேடிய போது அருகே உள்ள திருப்பூவனூரில் செங்கழுநீர் என்ற தடாகத்தின் கரையில் புன்னை மர காடுகளுக்கு நடுவில் புற்று ஒன்று இருந்தது....ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆச்சார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ பகவான் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நாம பஜனை சம்பிரதாயத்தில் முதல் குரு. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கோவிந்தபுரத்தில் தங்கி இருந்தபோது பக்கத்துக்கு கிராமமாகிய பெரம்பூர் என்னும் கிராமத்திற்கு சென்றார். அங்கே அவரது கனவில் பெருமாள் ஸ்ரீ சீதா -ராமனாக காட்சி கொடுத்தார். அதே நேரம் நான் பூமிக்கடியில் உள்ளேன் என்னை வெளியே எடுத்து எனக்கு கோயில் கட்டி வழிபடுவாய் என்று அசரீரி வாக்கு கேட்டதாம் உடனே ஸ்வாமிகள் தமது பரிவாரங்களுடன் சென்று தேடிய போது அருகே உள்ள திருப்பூவனூரில் செங்கழுநீர் என்ற தடாகத்தின் கரையில் புன்னை மர காடுகளுக்கு நடுவில் புற்று ஒன்று இருந்தது. அதன் அருகில் ஜடாமுனீஸ்வரர் தனது பரிவாரங்களுடன் எழுந்தருளி இருந்தார்.அவர் ஸ்வாமிகளிடம் எனது குருநாதர் ஸ்ரீ சீதாராமன் அவரை எங்கு நீங்கள் பிரதிஷ்டை செய்தாலும் அவ்விடத்தில் நீங்கள் என்னையும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி பூமியை தோண்டி பார்த்தபோது அங்கு ஸ்ரீ கோதண்டராமர் சீதா தேவி, லக்ஷ்மணர் , ஆஞ்சநேயர் முதலிய விக்கிரகங்கள் கிடைத்தன. அத்திருசிலைகளை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் கோயில் கட்டினார். அக்கோயில் வளாகத்திலேயே மேற்கு திசையில் ஸ்ரீ ஜடாமுனீஸ்வரருக்கும் கோயில் எழுப்பப்பட்டது. மேலும், இக்கோயிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ லட்சுமி நாராயணன், தேசிகன் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புன்னை மரம் தல விருட்சம்.