Arulmigu Valmeeganathaswamy Temple, Cheyyur - 603302, Chengalpattu District [TM001771]
×
Temple History
தல வரலாறு
ஊருக்கு வட கோடியில் உள்ளது. பழமையான பரம்பரை தேவஸ்தானம். சுவாமி பெயர் வன்மீகநாதர் அம்மன் பெயர் முத்தாம்பிகை ஆதிகாலத்தில் இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு வன்மீகபுரமென்று பெயரென்றும், சுவாமி புற்றிடங் கொண்டவரென்றும், சுயம்புலிங்கமென்றும், ஒரு காலத்தில் தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட தெய்வமென்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தின் விஸ்தீரணம் வடக்கு தெற்கில் 51 கஜம். கிழக்கு மேற்கில் 65 கஜம்.
இதற்குப் பிரகாரங்கள் இரண்டு முகத்துவாரத்தில் சிறிய கோபுரம் ஒன்றுண்டு. கோபுரவாயில் தெற்கு நோக்கியது. வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி. தென்மேற்கு மூலையில் விநாயகர், ஷண்முகர். உள்பிராகாரத்தில் கர்ப்பக் கிருஹத்துக்கு வலது பக்கத்தில் நாயன்மார்கள், அஷ்டலக்ஷ்மிகள். பிரம்மா, சாஸ்தா முதுலிய விக்கிரகங்களும், பின்புறத்தில் சில விக்கினேஸ்வரர் உற்சவ சோமாஸ்கந்தர், அம்பாள், உற்சவ சுப்பிரமணியர், வேதகிரீஸ்வரர், விஸ்வநாதர், மூல சப்பிரமணியர்...ஊருக்கு வட கோடியில் உள்ளது. பழமையான பரம்பரை தேவஸ்தானம். சுவாமி பெயர் வன்மீகநாதர் அம்மன் பெயர் முத்தாம்பிகை ஆதிகாலத்தில் இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு வன்மீகபுரமென்று பெயரென்றும், சுவாமி புற்றிடங் கொண்டவரென்றும், சுயம்புலிங்கமென்றும், ஒரு காலத்தில் தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட தெய்வமென்றும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயத்தின் விஸ்தீரணம் வடக்கு தெற்கில் 51 கஜம். கிழக்கு மேற்கில் 65 கஜம்.
இதற்குப் பிரகாரங்கள் இரண்டு முகத்துவாரத்தில் சிறிய கோபுரம் ஒன்றுண்டு. கோபுரவாயில் தெற்கு நோக்கியது. வெளிப்பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி. தென்மேற்கு மூலையில் விநாயகர், ஷண்முகர். உள்பிராகாரத்தில் கர்ப்பக் கிருஹத்துக்கு வலது பக்கத்தில் நாயன்மார்கள், அஷ்டலக்ஷ்மிகள். பிரம்மா, சாஸ்தா முதுலிய விக்கிரகங்களும், பின்புறத்தில் சில விக்கினேஸ்வரர் உற்சவ சோமாஸ்கந்தர், அம்பாள், உற்சவ சுப்பிரமணியர், வேதகிரீஸ்வரர், விஸ்வநாதர், மூல சப்பிரமணியர் முதலிய விக்கிரகங்களும், .இடதுபுறத்தில் உற்சவ மூர்த்திகளும், சந்திர கிரகங்களும், இடது புறத்தில் உற்சவ மூர்த்திகளும், சந்திரசேகரர், பராசத்தி முதலிய விக்கிரகங்களும் நிறைந்திருக்கின்றன.