அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், கீழபழையாறை, கும்பகோணம் - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Somanathaswamy Temple, Kizhapazhayaarai, Kumbakonam - 612703, Thanjavur District [TM018003]
×
Temple History
தல வரலாறு
மங்கையர்குலத்திலகம், சைவ சமயத்தின் விடிவெள்ளி, சைவத்தின் ஆணிவேர் என்றெல்லாம் போற்றப்படும் மங்கையர்க்கரசி மணி முடிச்சோழன் மகளாக இவ்வூரில் பிறந்தார். இவர் கூன்பாண்டியனின் மனைவியாவார். சமணப்படுகுழியில் பாண்டிய மன்னன் வீழ்ந்து கிடக்க பாண்டிய நாட்டின் சமயமாக சமணம் திகழ்ந்தது. ஞானசம்பந்தப்பெருமான் இறைவனுடைய திருவருளால் ஞானப்பால் உண்டு தலங்கள் தோறும் சென்று திருமுறைகளைப்பாடி வருகின்ற தன்மையையும், மீண்டும் சைவத் திருக்கோயில்கள் மறுமலர்ச்சி உற்று புதுப்பொழிவு பெற்றுத் திகழ்வதையும் மங்கையர்க்கரசியார் அறிந்தார்.
தங்கள் அமைச்சர் குலச்சிரையார் மூலமாக ஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு அழைத்தார். பாண்டி மன்னனின் வெப்புநோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாண்டி மன்னனின் கூன்முதுகு நிமிரப்பெற்றதால் சீர் நெடுமாறன் எனும் பெயர் பெற்றார். அங்கே சைவமும் நிமிர்ந்து...மங்கையர்குலத்திலகம், சைவ சமயத்தின் விடிவெள்ளி, சைவத்தின் ஆணிவேர் என்றெல்லாம் போற்றப்படும் மங்கையர்க்கரசி மணி முடிச்சோழன் மகளாக இவ்வூரில் பிறந்தார். இவர் கூன்பாண்டியனின் மனைவியாவார். சமணப்படுகுழியில் பாண்டிய மன்னன் வீழ்ந்து கிடக்க பாண்டிய நாட்டின் சமயமாக சமணம் திகழ்ந்தது. ஞானசம்பந்தப்பெருமான் இறைவனுடைய திருவருளால் ஞானப்பால் உண்டு தலங்கள் தோறும் சென்று திருமுறைகளைப்பாடி வருகின்ற தன்மையையும், மீண்டும் சைவத் திருக்கோயில்கள் மறுமலர்ச்சி உற்று புதுப்பொழிவு பெற்றுத் திகழ்வதையும் மங்கையர்க்கரசியார் அறிந்தார்.
தங்கள் அமைச்சர் குலச்சிரையார் மூலமாக ஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு அழைத்தார். பாண்டி மன்னனின் வெப்புநோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாண்டி மன்னனின் கூன்முதுகு நிமிரப்பெற்றதால் சீர் நெடுமாறன் எனும் பெயர் பெற்றார். அங்கே சைவமும் நிமிர்ந்து நின்றது. இம்மாதரசியை, ஞானசம்பந்த பெருமான் மங்கையர்க்கு அரசி, வளவர்கோன்பாவை, வலிவளர்கைமடமானி எனப் போற்றுகிறார். வருடந்தோறும் சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று மங்கையர்க்கரசியார் குருபூஜை நடைபெறுகின்றது.
சைவம் தழைப்பதற்கு அமைந்த மங்கையர்க்கரசியார் பிறந்த இப்பழையாறை மாநகரில் பெரியதொரு சிவாலயம் எடுக்க வேண்டும் என்று மூன்றாம் குலோத்துங்க சோழன் விரும்பினார். கோயிலை கற்றளியாக்கி விரிவு செய்தார். மிகப்பெரிய இராஜகோபுரம் அமைக்க விரும்பினார். அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் திருப்பணி நிறைவு பெறாமல் நின்றுபோனது.
தல பெருமை
தட்சனுடைய சாபத்தால் சந்திரனுக்கு ஏற்பட்ட உடல் அழுகும் நோய் வரப்பட்டது இதனைப் போக்க இத்திருக்கோயில் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தார். ஈசன் திருவருளால் தன்னுடைய இழந்த கலைகள் யாவும் மீண்டும் வளரும் தன்மை பெற்றார். ஈசனிடம் தனக்கு ஏற்பட்டது போல் நோயுடையார் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட நோய் நீங்கப்பெற வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார். மேலும் நல்நிலையிலிருந்து வறுமையுற்றோர் இத்தல இறைவனிடம் வந்து வழிபட மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற வேண்டும் என வேண்டினார். சந்திரனுக்கு சோமன் என்று ஒரு பெயர் உண்டு. சோமன் வழிபட்டு அழியாப் பெருவாழ்வு பெற்றதால் இறைவன் சோமநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன். பரம்பொருளைத் தாங்குகின்ற பெருமை தனக்கே உரியது...தட்சனுடைய சாபத்தால் சந்திரனுக்கு ஏற்பட்ட உடல் அழுகும் நோய் வரப்பட்டது இதனைப் போக்க இத்திருக்கோயில் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தார். ஈசன் திருவருளால் தன்னுடைய இழந்த கலைகள் யாவும் மீண்டும் வளரும் தன்மை பெற்றார். ஈசனிடம் தனக்கு ஏற்பட்டது போல் நோயுடையார் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட நோய் நீங்கப்பெற வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார். மேலும் நல்நிலையிலிருந்து வறுமையுற்றோர் இத்தல இறைவனிடம் வந்து வழிபட மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற வேண்டும் என வேண்டினார். சந்திரனுக்கு சோமன் என்று ஒரு பெயர் உண்டு. சோமன் வழிபட்டு அழியாப் பெருவாழ்வு பெற்றதால் இறைவன் சோமநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன். பரம்பொருளைத் தாங்குகின்ற பெருமை தனக்கே உரியது என கைலாய மலை செருக்குற்று இருந்தது. அது போலவே தன் தோள் வலிமையால் இராவணணும் செருக்குற்று இருந்தான் இந்நிலையில் பார்வதிதேவியார் இறைவனிடத்தில் ஊடல் கொண்டிருந்தார். பார்வதியாரின் ஊடலைத் தீர்க்கவும் இவ்விருவரின் ஆணவத்தை நீக்குவதற்கும் இறைவன் திருவுள்ளம் கொண்டார்.
இராவணன் கைலாய மலையை எடுக்க கைலாயம் அசைந்தது. பார்வதியார் அஞ்சி இறைவனை பற்ற பார்வதி தேவியாரின் ஊடல் நீங்கியது. பார்வதியாருக்காக சுவாமி கட்டை விரலை ஊன்றுவது போல கைலாய மலையை அழுத்த கைலாயத்தின் ஆணவம் அங்கே அகன்றது. இராவணனின் தோள்கள் நெறிய இராவணனின் ஆணவமும் அகன்றது. தன்னுடைய ஆணவம் போக கைலாய மலையும் இராவணனும் பூஜித்த தலம் . கருடனும் ஆதிசேஷனும் வழிபட்ட தலம் ஆகும்.