Screen Reader Access     A-AA+
அருள்மிகு தருமபுரீஸ்வரசுவாமி திருக்கோயில், வள்ளலார்கோயில், கும்பகோணம் - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Dharmapureeswara Swamy Temple, Vallalarkoil, Kumbakonam - 612703, Thanjavur District [TM018004]
×
Temple History

தல வரலாறு

சோழர்களால் பழையாறை வடதளி என்று அழைக்கப்பெற்ற ஸ்தலம் முழையூரில் வள்ளலார் கோயில் எனவும் தருமபுரீஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது. அப்பர் சுவாமிகளால் உண்ணாநோன்பு இருந்து சமணர்களால் மறைக்கப்பெற்ற இத்திருக்கோயில் வெளி கொண்டு வரப்பெற்றது. கோட்செங்கசோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதிநாயனார் அவதரித்த திருத்தலமாகும். பெரியபுராண வரலாறு திருநாவுக்கரசர் பழையாறை வடதளி எனும் தலத்தை அடைந்தார். அங்குள்ள திருக்கோயில் விமானத்தைக் கண்டு வணங்கிய அடிகள் அது சமணரால் மறைக்கப்பெற்றிருத்தலைக் கண்டு மனம் வருந்தினார். சிவன் திருவுருவைக் கண்டாலன்றிப் போகேன் எனக்கூறி உண்ணாநோன்பு மேற்கொண்டார். ...