அருள்மிகு கோடீஸ்வரசுவாமி திருக்கோயில், கொட்டையூர், கும்பகோணம் - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Kodeeswaraswamy Temple, Kottaiyur, Kumbakonam - 612001, Thanjavur District [TM018005]
×
Temple History
தல வரலாறு
கோடீச்சுரமேய குழகன் கழல் போற்றி
பந்தார் விரலம்மை பதமலரிணை போற்றி
இத்திருத்தலத்தில் ஹேரண்ட முனிவருக்கு இக்கொட்டையூர் கோமான் கோடி விநாயகர், கோடி அம்மையார், கோடி முருகர், கோடி சண்டீகேசுவரர்களோடு தாமும் கோடித் திருவுருவம் கொண்டு காட்சி அருளினார். இதனால் இவ்வூர் இறைவனுக்கு கோடீஸ்வரர் என பெயராயிற்று.
தலச்சிறப்பு
இத்திருக்கோயிலின் சுவாமி சிவலிங்க பெருமான் திருவுருவம் பலாக்காய் போன்று முள், முள்ளாகத் திருமேனியெங்கும் உடைமை நேரிற் கண்டறியத்தகும். ஒவ்வொரு முள்ளும் ஒவ்வொரு சிவலிங்கமாகும். கோடி விநாயகர் திருமேனியிலும் பல விநாயக வடிவங்கள் காணப்படும். இத்தலம் திருநாவுக்கரசராலும், அருணகிரியாராலும் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.
தல பெருமை
இத்திருக்கோயிலின் விநாயகர் உடல் முழுவதும் சிறு சிறு விநாயகர் வடிவத்தோடு காணக்கூடிய...கோடீச்சுரமேய குழகன் கழல் போற்றி
பந்தார் விரலம்மை பதமலரிணை போற்றி
இத்திருத்தலத்தில் ஹேரண்ட முனிவருக்கு இக்கொட்டையூர் கோமான் கோடி விநாயகர், கோடி அம்மையார், கோடி முருகர், கோடி சண்டீகேசுவரர்களோடு தாமும் கோடித் திருவுருவம் கொண்டு காட்சி அருளினார். இதனால் இவ்வூர் இறைவனுக்கு கோடீஸ்வரர் என பெயராயிற்று.
தலச்சிறப்பு
இத்திருக்கோயிலின் சுவாமி சிவலிங்க பெருமான் திருவுருவம் பலாக்காய் போன்று முள், முள்ளாகத் திருமேனியெங்கும் உடைமை நேரிற் கண்டறியத்தகும். ஒவ்வொரு முள்ளும் ஒவ்வொரு சிவலிங்கமாகும். கோடி விநாயகர் திருமேனியிலும் பல விநாயக வடிவங்கள் காணப்படும். இத்தலம் திருநாவுக்கரசராலும், அருணகிரியாராலும் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.
தல பெருமை
இத்திருக்கோயிலின் விநாயகர் உடல் முழுவதும் சிறு சிறு விநாயகர் வடிவத்தோடு காணக்கூடிய அற்புதம். இவருக்கு கோடி விநாயகர் என்னும் திருநாமம் இவ்வூரில் இவர் சுயம்பு விநாயகராக அருளாட்சி செய்கிறார்.
சுவாமி தன்னகத்தேயே கோடி லிங்கங்களையும் கொண்டு சுயம்புநாதனாக திகழ்கிறார். மேலும் கங்கையைத் தாங்கிய இடத்திலிருந்து இன்றைக்கும் கங்கை நீர் அரும்பும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக காணப்படுகிறது.
அம்பாள் மிக அழகான கோலத்தோடு, கந்துக கிரீடாம்பாள் என்று வடமொழியிலும் பந்தாடுநாயகி என்று தமிழிலும் அழைக்கப்படுகிறார்.
சுவாமி, கோடித்தலங்களுக்குச் சென்று கிடைக்கும் புண்யத்தைக் கொட்டையூரிலேயே பெறும் வண்ணம் பத்ரயோகி முனிவருக்கு, கோடிவிநாயகர், கோடிமுருகன், கோடி சண்டீகேஸ்வரர், கோடியம்மனோடு, தானும் கோடித் திருஉருக்கொண்டு காட்சி அருளினார். எனவே இத்தலத்தில் செய்யும் காரியங்களின் பலன் கோடியாகப் பெருகுமென்று புராணங்கள் கூறுகிறது.
கொட்டை மரத்தின் ஆமணக்குச் செடி கீழே அமர்ந்து, ஆத்ரேய மகரிஷி தவஞ்செய்தமையால் ஹேரண்டமுனிவர் என்னும் காரணப்பெயர் பெற்றார். அவர் தவஞ்செய்த இடத்திற்கும் ஹேரண்ட க்ஷேத்திரம் என்று வடமொழியில் இருந்ததை தமிழில் கொட்டையூர் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயில் தல விருட்சம் ஆமணக்குச் செடி ஆகும்.
ஹேரண்ட முனிவர், கும்பகோணத்திற்கு கிழக்கே காவிரி தொடர்ந்து பாய வழிவகைசெய்து சமுதாயத் தொண்டையும் சமயத் தொண்டையும் செய்து இறைவனை வழிபட்டார். இவரின் திருஉருவம் பெரியதாகத் திருக்கோயிலில் உள்ளது. பிரம்மன் முதலிய தேவர்களும் மார்க்கண்டேயர் முதலிய முனிவர்களும் பூசித்த தலம். சுருசி என்பார் சாபவிமோசனம் பெற்ற இடம். பத்ரயோகி தவ வலிமைபெற வழிபட்ட தலம் ஆகும்.
நவக்கிரக நாயகர்கள் தனக்கே உரித்தான வாகனங்களுடன் காட்சி தரும் அற்புத தலம். அஷ்ட்டமா சித்திகளையும் அள்ளித்தரும் மிக அற்புதமான வேலைப்பாட்டோடு, வலது காலை முன் வைத்த கோலத்தோடு அருள்பாலிக்கும் அஷ்டபுஜ துர்க்கை இங்கு காணப்படுகிறது.
எப்பிணியையும் தீர்க்கும் கோடீதீர்த்தம் என்னும் அமுத கிணறு. ஆத்ரேய முனிவரால் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்யும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்டது. எக்காலத்திலும் வற்றாத நிலையில் மிகுந்த ருசியோடு கூடிய தல தீர்த்தம் கோடீ தீர்த்தம் ஆகும்.
திருவலஞ்சுழியில் காவிரி நதி பிலத்தில் இறங்கிய போது முடிதரித்த மன்னரோ, முனிவரோ பிலத்தில் இறங்கினால் காவிரி மேல் வரும் என அசரீர் தெரிவித்ததால் மன்னர் நாட்டை ஆளட்டும் தாம் இறங்குவதாக ஹேரண்ட முனிவர் தெரிவித்து பிலத்தில் இறங்கி காவிரி மேல் வந்ததால் மேலக்காவிரி என்று வழங்கலாயிற்று, ஹேரண்ட முனிவர் மேல் வந்த இடம் மேலப்பெரும்பள்ளம் என்கிற ஊராகும். திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரப்பாடலில் திருவலஞ்சுழியையும் கொட்டையூரையும் இணைத்து பாடியுள்ளது சிறப்பாகும்.
இத்திருக்கோயிலை பல்லவ அரசனும் சோழ அரசனும் கட்டி முடித்திருக்கிறார்கள். மகாமக தீர்த்தவாரி சைவத்திருக்கோயில் பன்னிரெண்டில் இதுவும் ஒன்று ஆகும். மகாமக குளத்தில் மேல் கரையில் வடகோடி தீர்த்த இடமாகும்.