Screen Reader Access     A-AA+
அருள்மிகு கந்தநாதசுவாமி திருக்கோயில், ஏரகரம், கும்பகோணம் - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Kandhanatha Swamy Temple, Erakaram, Kumbakonam - 612001, Thanjavur District [TM018008]
×
Temple History

தல வரலாறு

ஏரகரம் - வேலும் மயிலும் காக்கும் என்பர் முருக பக்தர். ஏரகரத்தில் அருள்பாலிக்கும் முருகன் கையிலிருக்கும் வேல் இத்தலத்தில் உள்ள அருள்மிகு சங்கரி அம்மனிடம் இருந்து பெறப்பட்டது. முன்னொரு காலத்தில் உலகில் அசுரர்களால் மனிதர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைப் போக்க சிவபெருமான் குழந்தையான கந்தனை அழைத்து முனிவர்கள் இன்னல்களைப்போக்க பூவுலகம் செல்லுமாறு கூற குழந்தையான முருகனும் பூவுலகில் நான் எங்கு சென்று தங்குவது என வினவ எம்பெருமான் சிவபெருமான் ஒரு அஸ்த்திரத்தைக் கொடுத்து இதை நீ எய்யும் பொழுது எந்த இடத்தில் சென்று தங்குகிறதோ அதை உன் அகமாகக்கொள் என்றார். முருகனும் அவ்வாறே செய்ய அந்த அஸ்த்ரம் விழுந்த இடம் தான் ஏரகரம். அசுரர்களை அழிக்க...