தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆதனூரில் உள்ள இத்திருக்கோயில் சுவாமிமலையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் தனியார் அறக்கட்டளையின் பராமரிப்பில் இருந்து வந்தது. கருங்கல் மதிற்சுவருடன் பெருமளவு சிதலமடைந்த நிலையில் அறக்கட்டளையினரால் இத்திருக்கோயில் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலுடன் 1982-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. அதன்பின்னர் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி மற்றும் முன்புறம் மதிற்சுவர் எழுப்பி 12.09.2010-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
இத்திருக்கோயிலில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது இத்திருக்கோயிலின் சிறப்புடையதாகும். திருப்பாண்டி கொடுமுடி சிற்றரசரின் மகள் இராஜராஜ சோழனை திருமணம் செய்து கொண்டார்....தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், ஆதனூரில் உள்ள இத்திருக்கோயில் சுவாமிமலையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இத்திருக்கோயில் தனியார் அறக்கட்டளையின் பராமரிப்பில் இருந்து வந்தது. கருங்கல் மதிற்சுவருடன் பெருமளவு சிதலமடைந்த நிலையில் அறக்கட்டளையினரால் இத்திருக்கோயில் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலுடன் 1982-ம் ஆண்டு இணைக்கப்பட்டது. அதன்பின்னர் சுவாமி சன்னதி, அம்பாள் சன்னதி மற்றும் முன்புறம் மதிற்சுவர் எழுப்பி 12.09.2010-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
இத்திருக்கோயிலில் சுவாமி சன்னதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது இத்திருக்கோயிலின் சிறப்புடையதாகும். திருப்பாண்டி கொடுமுடி சிற்றரசரின் மகள் இராஜராஜ சோழனை திருமணம் செய்து கொண்டார். அந்த ராணியின் பிராத்தனைக்கு சிவாலயம் கட்டப்பட்டது. இராகு தோஷம் உள்ளவர்கள் இவ்வாலயம் வந்து தரிசனம் செய்தால் தோஷம் நீங்கப்பெற்று நற்பயன் பெறுவர் என்பது ஐதீகம் ஆகும்.