Screen Reader Access     A-AA+
அருள்மிகு எழுத்தறிநாதசுவாமி திருக்கோயில், இன்னம்பூர் - 612303, தஞ்சாவூர் .
Arulmigu Ezhtharinatha Swamy Temple, Innambur - 612303, Thanjavur District [TM018011]
×
Temple History

தல வரலாறு

அகண்ட சச்சிதானந்த ரூபியாய் ஆனந்த மூர்த்தியாகி எங்கும் நீக்கமற நிறைகின்ற எம்பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அர்ச்சாவதார் ரூபியாய் திருமேனி தாங்கி கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற சோழவளநாட்டிடையே பொன்னிநதியாம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 54 தலங்களுள் 45-வது திருத்தலமாக அமைந்துள்ளது. திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலமாகும். சூரியன் வழிபட்டுத் தன் ஒளிமிகப்பெற்றதால் இனன்சூரியன்நம்பு ஊர் என வழங்கி இன்னம்பூர் என பெயர் பெற்றது. சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1,2 பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் காலையில் சிவலிங்க திருமேனியில் ஒளிபடுகின்றது. இதனை சூரியபூஜையாக கொண்டாடுகின்றனர். தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளையானை இங்கு உள்ள...