Screen Reader Access     A-AA+
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை - 612605, தஞ்சாவூர் .
Arulmigu Saranathaperumal Temple, Thirucherrai - 612605, Thanjavur District [TM018022]
×
Temple History

தல பெருமை

மகா விஷ்ணுவிற்கு பிடித்தமானதும், இவ்வுலக இன்பங்களையம், பேரின்பத்தையும் அளிக்க கூடியன ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் வானமாமலை, மேல்கோட்டை, கும்பகோணம், திருவனந்தபுரம், அயோத்தி, பத்ரிநாத், நைமிசாரண்யம், ஸாரஷேத்ரம், ஆகிய பன்னிரண்டு திருத்தலங்களாகும் இத் திருத்தலங்களுக்குள் திருச்சேறை ஸாரஷேத்ரமும் ஒன்றாகும். இத்தலத்தில் வேண்டிய பலன்களை அளிக்கக்கூடிய திருவடியை உடையவரும் லக்ஷ்மியால் மங்களமாக்கப்பட்டு திருமார்பில் முத்துமாலை மற்றும் கௌஸ்தூபகளுடனும் திருக்கரங்களில் சங்கு சக்கரம், செந்தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தியும், முகில் வண்ணனும், முழு நிலவு போன்ற முகத்தவனும் அழகான மகுடத்தை உடையவருமான ஸ்ரீ சாராநாத பெருமாள் பஞ்ச லக்ஷ்மிகளுடன் எழுந்து அருளியிருக்கின்றார்

புராண பின்புலம்

காவிரிக்கு அருளல் ப்ரம்மா காவிரியிடம் கங்கைக்கு மேலான சிறப்பை மஹா விஷ்ணு ஒருவராலேயே தர இயலுமாதலால் எல்லா பாபங்களையும் அழிக்கவல்ல ஸாரபுஷ்கரணியின் கரையில் தவம் இருந்தால் மஹா விஷ்ணுவின் அனுகிரகத்தால் வேண்டிய வரம் கிடைக்கும் என கூறினார். காவேரியும் மூவாயிரம் தேவ ஆண்டுகள் தவம் செய்து முடியும் போது முதலில் குழந்தை உருவத்திலும் பிறகு பஞ்சலட்சுமிகளுடன் ஸ்ரீஹரி தோன்றி 1.ஸார க்ஷேத்திரம் சேர்ந்து, ஸார புஷ்கரிணியில் நீராடி யார் யாரெல்லாம் உன்னை அர்ச்சிகிறார்களோ, அவர்கள் அனைவரும் முக்தியை அடைவார்கள் 2.இந்த புனிதமான தலத்தில் யாண்டும் குடியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்போம். 3.தென்னகத்தில் கங்கைக்கு மேலான சிறப்பை காவிரி அடைவாள் என்றும்...