அருள்மிகு கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில், Thirubhuvanam - 612103, தஞ்சாவூர் .
Arulmigu Kampagareswaraswamy Temple, Thirubhuvanam - 612103, Thanjavur District [TM018037]
×
Temple History
தல பெருமை
வரகுண பாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறார். அவ்வாறு செல்லும் போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர குதிரையின் வேகத்தை அடங்குவதற்குள் குதிரையின் காலில் விழுந்து விதிப்பயனால் அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுண பாண்டியனை பிடிக்கிறது. அதாவது பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட மன்னன் தன தோஷம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேஸ்வரர் போக்குகிறார். மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை போக்கியதால் நடுக்கம் தீர்த்த...வரகுண பாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறார். அவ்வாறு செல்லும் போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர குதிரையின் வேகத்தை அடங்குவதற்குள் குதிரையின் காலில் விழுந்து விதிப்பயனால் அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுண பாண்டியனை பிடிக்கிறது. அதாவது பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட மன்னன் தன தோஷம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேஸ்வரர் போக்குகிறார். மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை போக்கியதால் நடுக்கம் தீர்த்த நாயகர் என பெயர் இறைவனுக்கு ஏற்படுகிறது.