Screen Reader Access     A-AA+
அருள்மிகு அனுமார் திருக்கோயில், கும்பகோணம் நகர், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Anumar Temple, Kumbakonam Town, Kumbakonam - 612001, Thanjavur District [TM018049]
×
Temple History

தல பெருமை

அருள்மிகு சாரங்கபாணி சுவாமியின் அந்தரங்க தாசபூதரான அனுமாருக்கு பொற்றாமரை திருக்குளத்தின் மேற்கு பகுதியில் திருக்கோயில் அமைந்துள்ளது. வியாச பகவான் பிரதிஷ்டை செய்த 108 அனுமார் சுவாமிகளில் இந்த அனுமாரும் ஒருவர். மூல மூர்த்தி வலது கை ஓங்கிய கையாகவும் இடது கையில் பாரிஜாத பூவை வைத்து வடக்கு பக்கம் முகம் பார்த்து நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவருடைய வாலில் மணி உள்ளது விசேஷமானது. உற்சவ மூர்த்தி இரண்டு கைகளையும் வணங்கியபடி நின்ற கோலத்தில் உள்ளார். சாரங்கபாணி திருக்கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழாவின்போது சாரங்கபாணி சுவாமியை ஆஞ்சநேயர் தரிசித்தப்படி பின்புறமாக வீதியூலா நடைபெறும்.