ஒருநாள் நைமிசாரண்யத்தில் மற்ற மஹாமுனிவர்களைப் பார்த்து மரீசி முனிவர், முனி சிரேஷ்டர்களே ஒப்பில்லாத அற்புதமான ஒரு ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கின்றேன். இந்த க்ஷேத்ரம் பகவானின் அதில கல்யாண குணங்களையும் ஸ்தோத்ரம் பண்ண ஏற்ற இடம், புண்ணிய நதிகள் கூடும் இடம் ரம்யமான வனங்களும் மலையும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்ற ஸ்தலம் அங்கிருந்து தவம் செய்கின்றவர்களுக்கு அதன் பலன் வெகு சீக்கிரம் கிடைக்கும் என்பது உறுதி.
ஸ்ரீ விகனஸருடைய சிஷ்யரும், என்னுடன் அனைத்து வித்யைகளையும் பயின்றவரும் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்மருடைய ஸத்பக்தருமான அத்ரி மஹரிஷி நைமிசாரண்யத்தில் உள்ள இந்த ஆச்ரமத்திலிருந்து கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். எம்பெருமான் லக்ஷ்மி நரஸிம்மரைக் கண்குளிரக் காண வேண்டும் என்கிற வாஞ்சையோடு தவம் செய்த அவர்...ஒருநாள் நைமிசாரண்யத்தில் மற்ற மஹாமுனிவர்களைப் பார்த்து மரீசி முனிவர், முனி சிரேஷ்டர்களே ஒப்பில்லாத அற்புதமான ஒரு ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கின்றேன். இந்த க்ஷேத்ரம் பகவானின் அதில கல்யாண குணங்களையும் ஸ்தோத்ரம் பண்ண ஏற்ற இடம், புண்ணிய நதிகள் கூடும் இடம் ரம்யமான வனங்களும் மலையும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கின்ற ஸ்தலம் அங்கிருந்து தவம் செய்கின்றவர்களுக்கு அதன் பலன் வெகு சீக்கிரம் கிடைக்கும் என்பது உறுதி.
ஸ்ரீ விகனஸருடைய சிஷ்யரும், என்னுடன் அனைத்து வித்யைகளையும் பயின்றவரும் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்மருடைய ஸத்பக்தருமான அத்ரி மஹரிஷி நைமிசாரண்யத்தில் உள்ள இந்த ஆச்ரமத்திலிருந்து கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். எம்பெருமான் லக்ஷ்மி நரஸிம்மரைக் கண்குளிரக் காண வேண்டும் என்கிற வாஞ்சையோடு தவம் செய்த அவர் அத்திருக்காட்சி கிடைக்காமல் மிகவும் வாடி வருந்தலானார். அப்போது ஓர் அசரீரி வாக்கு எழுந்தது.
அத்ரி மஹரிஷி வெங்கடாசலத்திற்கு (திருமலை) தெற்கில்
ஐந்து யோசனை தூரத்திலும் பாடலாத்ரிக்கு மேற்கில் இரண்டு
க்ரோச தூரத்திலும், ஸ்ரீ ஹஸ்திசைலத்திற்கு கிழக்கே யோஜனை
மாத்திரத்திலே, ஸ்ரீமத் ஸுதர்சன கிரிக்கும், திருவேணி
ஸங்கமத்திற்கும் வடக்குத் திசையில் யக்ஷ கின்னர கந்தர்வர்களால்
ஸேவிக்கப்பட்ட அற்புதமான பர்வதம் ஒன்று இருக்கிறது. அதன்
பெயர் ஸ்ரீ பத்மகிரி. அந்த மலையில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மருடைய
திவ்ய தரிசனம் உனக்கு நிச்சயமாகக் கிடைக்கும். அங்கே போய்த்
தவம் செய்து ஸ்ரீ ஹரியின் அருளைப் பெறுவாய், ஸ்ரீ லக்ஷ்மி
நரஸிம்மருடைய சாந்நித்யத்தை அடைவாய்.இந்த அசரீரி வாக்கினைக் கேட்ட அத்ரி மஹரிஷி மிகுந்த மகிழ்ச்சியோடு எம்பெருமானைப் ப்ரார்த்தித்துக் கொண்டு மனோஹரமாய், ரம்யமாய், பல்வேறு மரங்கள் சூழ்ந்த பறவையினங்கள் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் கல்பாறைகளையுடைய பத்மகிரியை வந்து அடைந்தார்.
இங்குள்ள தடாகங்கள் (அத்ரி புஷ்கரிணி) ஹஸ்திகிரி நாதனுக்கு ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து பக்ஷிராஜனாகிய கருடாழ்வாரால் கொண்டு வரப்பட்ட தாமரை மலர்கள் நிறைந்தவை. இத்தகைய பத்மகிரியின் அடியில் அரச மரத்தின் கீழே அத்ரி மஹரிஷி அமர்ந்தார். ஐம்புலன்களையும் அடக்கி, தம் மனதை ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மருடைய திருவடிகளில் சேர்த்து, தியானித்து வந்தார். எதுவொன்றும் உண்ணாமல், ஆசைகளைத் துறந்து பதின்மூன்று அக்ஷரமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ம மந்திரத்தைப் பரம பக்தியோடு ஜபம் பண்ணினார்.
தன் பக்தர்களைத் துன்புறுத்திய இரண்ய கசிபுவைக் கொன்று கோபாவேசத்துடன் நின்று, தமது பக்தனான ப்ரஹலாதனுக்காக சாந்தியடைந்த ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரைத் தம் மனதில் தியானம் பண்ணிக்கொண்டு அதி உக்ரமாகத் தவம் செய்தார் அத்ரி. அதனால் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் அத்ரி மஹரிஷிக்கு திருக்காட்சி நல்கினார். அந்தத் திவ்யமான திருக்காட்சி எப்படி இருந்தது தெரியுமா? பிரஸன்ன திருமுக மண்டலத்துடன், தாமரை போன்ற திருக்கண்களுடன், ஸிம்மத்தினது காதுகள் போன்ற காதுகளுடன், காந்தி மின்ன, ரத்தின ஆபரணங்கள் அணிந்து, நான்கு திருத்தோள்களுடன், மார்பிலே ஸ்ரீவத்ஸம், அபய முத்திரையுடன், மடியில் தாமரை மலரில் அமர்ந்த திருக்கோலத்தில் மஹாலக்ஷ்மியுடன் அந்த மலர் மங்கையை ஒரு கையில் ஆலிங்கணம் பண்ணிக்கொண்டு, மஹாலக்ஷ்மியும் ஒரு திருக்கையினாலே பெருமாளை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டு பத்ம ஹஸ்தத்துடன், கடி சூத்ரம், தங்கப் பூணூல் அணிந்து ஸர்வ அலங்கார பூஷிதராக மஹா லக்ஷ்மியுடன் சாந்த சொரூபியாக திவ்ய மங்கள விக்ரஹத்தோடு ப்ரத்யக்ஷமானார்.
கண்களைத் திறந்த அத்ரி மஹரிஷி கோடி ஸுர்ய காந்தியுடன் நின்ற எம்பெருமானின் திவ்யமான திருக்காட்சியைக் கண்டு கண்டு சேவித்தார் திரும்பத் திரும்ப சேவித்து எழுந்திருந்தார். சேவித்து ப்ரக்ஷிணம் பண்ணித் தெண்டம் சமர்ப்பித்தார்.
பக்தர்களுக்கும் சந்திரனைப் போல அழகாகவும். சத்ருக்களுக்கு ஸூரியனைப் போல உக்ரமாயும் எல்லாவற்றிற்கும் மேலானவராயும், புருஷோத்தமனாய் எழுந்தருளிய எம்பெருமானை ஸ்வாமியை சேவித்து ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்தார்.
எம்பெருமானே உலகங்களுக்கெல்லாம் பிஜமாயும் பக்தர்களை ரக்ஷிப்பவராகவும் உள்ள எண்குண அழகினை உடைய ஹரி உன்னை ஜபம் செய்து, மாயாபுரி என்ற இதயத்தில் ஸதா ஸர்வகாலமும் தியானித்து ப்ரஹலாத வரதராய் நரஸிம்ம ரூபியாய் உள்ள தேவரீரை நான் ஸேவிக்கின்றேன். லோகத்தில் இந்த ஸத்ய வ்ரத க்ஷேத்ரமான பத்மகிரி மலையில் எழுந்தருளி லோக மக்களுக்கெல்லாம் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மாய் திருக்காட்சி நல்க வேண்டும் என்று ப்ரார்த்தித்தார். பக்தரான அத்ரி மஹரிஷியினால் இந்த பத்மகிரியிலே ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மரூபியாய் பகவான் ஸாந்நித்யம் செய்தருளுகின்றார்.
இந்த ஸ்தல வரலாறு ப்ரம்மாண்ட புராணத்தில் பத்மகிரி மஹாத்மியத்தில் உள்ளது. அர்ச்சாவதாரப் பெருமையைக் கூறுகின்ற விஷ்ணு சித்தர், மரீசி இவர்களின் ஸம்வாதத்தில் இடம் பெற்றுள்ளது