Screen Reader Access     A-AA+
அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர் - 609401, மயிலாடுதுறை .
Arulmigu Veerateswarar Temple, Vazhuvur - 609401, Mayiladuthurai District [TM018062]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர் குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் ஸ்தல வரலாறு 48000 மகரிஷிகள் பிரமாவிடம் போய் தாங்கள் தவம் செய்ய ஒர் இடம் வேண்டும் என்று கூறுகின்றனர் பிரம்மா நான் தர்பையிலான ஒர் வலையத்தை வீசுவேன் அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் தவம் செய்யலாம் என்று கூறுகின்றார். அதுதான் தாருகாவனம்(தர்பையினால் ஆனது தாருகாவம்) தவம் செய்து நாங்கள் தான் எல்லா கடவுளுக்கும் மேலானவன் எங்களால் தான் உலகம் இயங்குகிறது என்று ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் எங்களுக்கு மேல் கற்புடையவள் யாரும் கிடையாது என்று என்னுகின்றனர் இந்த ஆணவத்தை அழிக்க ( சிவன் பிச்சாடராகவும் விஷ்ணு மோகினியாகவும் அவதரிக்கின்றனர்) இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்தவுடன் அய்யனார் பிறக்கிர். ...

தல பெருமை

பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன - அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல...