தல வரலாறு
திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசம், மயிலாடுதுறை மாவட்டத்தில் காழிச் சீராம விண்ணகரம், பாடலிகவனம் என்று அழைக்கப்படும் சீர்காழி திருவிக்கிரம பெருமாள் கோயில் ஆகும். ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். திருமங்கையாழ்வார் பாசுரம்: நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன் ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச் சூல் முகமார் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும் தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே