Arulmigu Margasagayaswamy Temple, Moovalur, Mayiladuthurai - 609806, Mayiladuthurai District [TM018082]
×
Temple History
தல பெருமை
வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.
அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது. மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர்....வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார்.
அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது. மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர். இறைவனின் கருணையால் அங்கு சிவலிங்கம் வெளிப்பட்டது. அவரை வணங்கி வழிபட்டு தோஷம் நீங்கினர் என தலபுராணம் கூறுகிறது.
திரிபுரம் தகனம் ஆன பிறகு திருமாலும், பிரம்மனும், இந்திரனோடு திரிபுரம் எரித்த அம்பைத் தேடி வந்தனர். அப்போது வேடன் உருவில் வந்த மாயூரநாதர், அவர்களை எதிர்கொண்டு அழைத்தார். அவர்களைப் புன்னாக வனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே வனத்தில் மறைந்திருந்த இறைவனின் லிங்கத் திருமேனியைக் காட்டி மறைந்தார். அவர்களுக்கு வழிகாட்டியதால் இறைவன் வழிகாட்டிய வள்ளல் என்றும், மார்க்க சகாயேசுவரர் என்றும் வழங்கப்பட்டார். மகிஷாசுரன் தன் தவ வலிமை யால், ஆண்களால் தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்ற வரத்தை சிவ பெருமானிடம் கேட்டுப் பெற்றான். அவனைப் பொறுத்தவரை, பெண்கள் எல்லாரும் சக்தியற்றவர்கள் என்ற எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தால் தேவர்களுக்கும், மக்களுக்கும் தீராத துயரத்தைத் தந்து வந்தான். பாதிக்கப்பட்ட அனைவரும் இறைவனிடம் முறையிட்டனர். அசுரனை வதம் செய்வது பெண் சக்தியால் மட்டுமே இயலும் என்பதால், அன்னை பார்வதியை நாடுமாறு சிவபெருமான் அறிவுறுத்தினார். அதன்படி தேவர்கள் அனைவரும், அன்னையிடம் சென்று முறையிட்டனர். அதற்குச் செவி மடுத்த அன்னை துர்க்கையாக வடிவம் பூண்டு, அசுரனை வதம் செய்து அழித்தாள். பிறகு தனது கோர முகம், அழகிய முகமாக மாற, மூவலூரில் தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு வந்தாள். அதன் பயனால், அன்னை அழகிய திருவுருவம் பெற்றாள். மீண்டும் இறைவனை மணம்புரிய தவம் இயற்றினாள். அதன்படியே இறைவனை மணந்தாள் என தலபுராணம் கூறுகிறது