Screen Reader Access     A-AA+
அருள்மிகு அமிர்தகலசநாதசுவாமி திருக்கோயில், சாக்கோட்டை, Sakkottai, Sakkottai - 612401, தஞ்சாவூர் .
Arulmigu Amirthakalasanatha Swamy Temple, Sakkottai, Sakkottai, Sakkottai, Sakkottai - 612401, Thanjavur District [TM018087]
×
Temple History

தல பெருமை

இத்தலத்தினைக் குறித்ததாக மூன்று புராண வரலாறுகள் கூறப்படுகின்றன. மகாபிரளயத்தின்போது மிதந்து வந்த அமிர்தகுடம் சிவபெருமானால் வேடுவ உருவம் கொண்டு உடைத்தபோது அமுத குடத்தின் நடுப்பக்கம் இத்தலத்தில் விழுந்ததால் திருக்கலயநல்லூர் பெயர் பெற்றது என்று கூறுவர். இரண்டாவதாக இத்தலத்தில் பிரம்மன் இறைவனை பூசித்து பேறு பெற்றார் என்பது. மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு உவந்து அம்மைக்கு வரங்கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார் என்பது சுந்தரர் பாடலில் முதல் பாடலாக விளங்குகின்றது.