Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாரியம்மன் வகையறா திருக்கோயில், Madagudi - 612402, தஞ்சாவூர் .
Arulmigu Mariyamman Vagayara Temple, Madagudi - 612402, Thanjavur District [TM018093]
×
Temple History

தல பெருமை

கோவில் நகரமாம் குடந்தை தாலுக்காவைச் சேர்ந்த தில்லையம்பூர் ஊராட்சி மாடாகுடி கிராமத்தில் முடிகொண்டான் ஆற்று தென்கரையில் சீதளாதேவி என்கிற மகாமாரியம்மன் கிழக்கு நோக்கிய ஈசான்ய பார்வையில் கோவில் கொண்டுள்ளாள். மனோன்மணி பீடம் ரிஷபவாகினியாயும், நான்கு கைகளுடன் உடுக்கை, சூலம், தமருகம் கொண்டும் ஒரு காலை மடக்கி அமர்ந்த கோலத்திலும் அக்னி சிரஸ் நாகாபரண குடையோடும் காட்சியுடையவள். இப்பகுதியில் பிராமண பூசையுடைய கோவில் இதுவொன்றே அம்பாள் ரிஷபவாகினி ஆதலால் மனோன்மணி பீடம், ரிஷப வாகினி என்பது கோவில் சுற்றுச்சுவர் முன் மண்டப கோபுரம், கற்பகிரக கோபுரம் இவற்றில் ரிஷபம் அமர்ந்திருக்கும்.