அருள்மிகு சுந்தரமூர்த்தி விநாயகர் திருக்கோயில், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Sundaramoorthi Vinayagar Temple, Kumbakonam - 612001, Thanjavur District [TM018102]
×
Temple History
தல வரலாறு
தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். சர்வலோக மாதாபிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களில் ஜேஷ்ட புத்திரர் அவர் பிள்ளை என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். மரியாதையாகப் பிள்ளையார் என்றும் சொல்வது தமிழ் நாட்டுச் சிறப்பு. பார்வதி பரமேசுவரர்களின் முதல் பிள்ளை இவர். குழந்தை சுவாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் முதல் பிரணவத்திலிருந்து தான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். விநாயகன் என்றால் தனக்கு மேல் நாயகன் அற்றவன் என்பது பொருள். அதாவது மூலமும் நடுவும் ஈறும் அற்ற முழுமுதற் பொருள் என்பதாம்.
பிடி...தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். சர்வலோக மாதாபிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களில் ஜேஷ்ட புத்திரர் அவர் பிள்ளை என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். மரியாதையாகப் பிள்ளையார் என்றும் சொல்வது தமிழ் நாட்டுச் சிறப்பு. பார்வதி பரமேசுவரர்களின் முதல் பிள்ளை இவர். குழந்தை சுவாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் முதல் பிரணவத்திலிருந்து தான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். விநாயகன் என்றால் தனக்கு மேல் நாயகன் அற்றவன் என்பது பொருள். அதாவது மூலமும் நடுவும் ஈறும் அற்ற முழுமுதற் பொருள் என்பதாம்.
பிடி அதன் உருஉமை கொள மிகுகரியது வடிகொடு தனது அடி
வழிபடும் அவர்இடர் கடிகணபதி வர அருளினன்.
என ஞானசம்பந்தர் அருளியுள்ளார். அடியார்களின் இடர்களைக்களைய வேண்டியே அவன் தோன்றினான் என்பது இதன் பொருளாம். குடமூக்கு என சமயக்குறவர்களால் தேவாராப்பாடல் பெற்றதும் காவிரி, அரசலாறு என்ற இரு புனித நதிகளை மாலையாக அணிந்தும், கும்பகோணம் என்ற திருத்தலத்தில் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலுக்கு தென்பால் கொத்தன் தெருவில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. மூலவர் ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.