Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோமேஸ்வரர் சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612001, தஞ்சாவூர் .
Arulmigu Someswarar Temple, Kumbakonam, Kumbakonam - 612001, Thanjavur District [TM018121]
×
Temple History

தல வரலாறு

பிரளயகாலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தைச் சிவபெருமான் கிராதவேடம் கொண்டு (வேடன் உருவம்) பாணம் எண்ண அதில் இருந்த சிக்கம் (உறி) இங்கு விழுந்தது, விழுந்த சிக்கம் ஒரு சிவலிங்கமாயிற்று ஆதலின் இத்தலத்திற்குச் சிக்கேசம் எனவும் சுவாமி சிக்கேசர் எனவும் அழைக்கப்பட்டார். காரோணம் என்ற பெயருடைய கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளன, 1.குடந்தைக்காரோணம் 2.நாகைக் காரோணம் 3.கச்சிக் காரோணம். காயஆரோகணம் என்பதன் திரிபே காரோணம். காயம் திருமேனி (உடல்) ஆரோகணம் (ஏற்றுக்கொள்ளல்) நவகன்னிகைகள் மகாமக தீர்த்தத்தில் நீராட வரும் பொழுது எழுந்த ஆரவாரத்தால் அம்பிகை அஞ்சி சிவபெருமானை அனைத்துக் கொண்டாள். அம்மையின் காயத்தை இறைவன் ஆரோகணித்துக் கொண்டமையால் காயாரோகணம் ஆயிற்று. சுவாமிக்குக் காயாரோகணர் என்ற பெயரும் உண்டாயிற்று, சந்திரன் (சோமன்) குருவின் மனைவியைப்பார்த்து மோகம்...