Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், கும்பகோணம், Kumbakonam - 612002, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanathar Temple, Kumbakonam, Kumbakonam - 612002, Thanjavur District [TM018122]
×
Temple History

தல வரலாறு

வடநாட்டில் கேதாரம் என்னும் திருத்தலத்தில் பிப்பிலாதன் என்னும் மகா சிவயோகி ஒருவர் நீண்ட காலம் சிவபெருமானை நோக்கி மிக கடுமையான தவம் இயற்ற சிவபெருமானும் பண்நாட்கள் காலம் தாழ்த்தி சிவயோகியின் உறுதி குன்றாத மாபெரும் தவத்திற்கு மகிழ்ந்து அவர்முன் தோன்றி அவருக்கு விருப்பமானதை வழங்க தாம் திருவுள்ளம் கொண்டுஉள்ளதாகவும், செயற்கரிய இத்தவத்தினால் மேன்மை மிக்க பயன் அடையுமாறு விரும்பிய ஓன்றை கேட்க்குமாறு கூறினார். இதனை கேட்டு மகிழ்ந்த சிவயோகியும் தாம் தவம் இயற்றிய நோக்கம் நிறைவேறியதை குறித்து நிறை நெஞ்சம் கொண்டு பெருமானே தாங்கள் திருக்கைலாய மலையில் எவ்வாறு கேட்டவற்றை எல்லாம் வரிவழங்கும் அன்னை உமாதேவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றிர்களோ அவ்வாறே எளியேனுக்கு திருக்காட்சி அளிக்க வேண்டுகிறேன் என்று பணிந்து...