தல பெருமை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சிவபுரம், அருள்மிகு சிவகுருநாதசுவாமி திருக்கோயில் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் இறைவனை திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோரால் போற்றி பாடப்பட்ட திருத்தலமாகும். மேலும் பாடல்பெற்ற திருக்கோயில் தல வரிசையில் 130வது திருத்தலமாகவும், காவேரியின் தென்கரையில் அமையப்பெற்ற பாடல்பெற்ற திருக்கோயில் வரிசையில் 67வது திருத்தலமாகவும் விளங்குகின்றது. இறைவனை தரிசிப்பதற்கு திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோர்கள் அங்கபிரதட்சணம் செய்து வந்து சுவாமி தரிசனம் செய்ததாக ஐதீகம்.