அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Ekambaranathar Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001816]
×
Temple History
தல வரலாறு
ஏகாம்பரநாதர் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம் இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால்...ஏகாம்பரநாதர் என்றும் அழைக்கப்படும் இத்திருக்கோயில் காஞ்சிபுரத்திலுள்ள பழமையான கோயில்களுள் ஒன்று. பல்லவர் காலத்திலேயே சிறப்புற்றிருந்ததாகக் கருதப்படும் இக்கோயில், இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பிற்பட்டது எனக் கருதப்பட்டாலும், இக் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இம் மன்னன் காலத்துக்கு முற்பட்ட கல்வெட்டுக்கள், இவ்விடத்தில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலொன்று முன்னரே இருந்திருக்கலாமோ என்ற ஐயப்பாட்டை வரலாற்றாய்வாளர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியும் இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது.
ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம் இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம், விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது. இதன் காலம் கி.பி 1509 எனக் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகின்றது. இங்கே விஜயநகர மன்னர் காலத்திய ஆயிரங்கால் மண்டபம் ஒன்றும் உண்டு. இம் மண்டபம் அதற்கு முன், நூற்றுக்கால் மண்டபமாக இருந்ததாகவும், அது பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுப் பிற்காலத்தில் திருத்தப்பட்டதாகவும் தெரிகின்றது.
இக்கோயிலின் வெளிமதில் கி.பி.1799 இல் ஹாச்ஸன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் மகாநிர்வாணம் முதலிய உருவங்கள் எல்லாமும் இக்கோயிலோடு சேர்ந்துவிட்டன. இச்சிலையில் சில பகுதியில் மகேந்திரன் காலத்து எழுத்துக்கள் சில இருக்கின்றன. சில இடங்களில் விஜயநகரச் சின்னங்கள் வராகமும் கட்கமும் இருக்கின்றன. முன்மண்டபத்தில் இருக்கும் ஒரு சிலை ஆதித்த கரிகாலன் உருவம் என்பர். அதற்குத் தாடி இருக்கிறது. சுவாமிசந்நிதி கிழக்கு. ஆனால், கோபுரவாயில் தெற்கே இருக்கின்றது.
தல பெருமை
காஞ்சிபுரம் நகரில் உயர்ந்த கோபுரம் கொண்ட திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம் ஆகும். சங்கரமடம் வெகு அருகிலமைந்துள்ளது. ஏகம் ஆம்பரம் (ஒற்றை மாமரம்) தல விருட்சமாகக் கொண்ட திருக்கோயில் இதுவாகும். அத்தலவிருட்சத்தினடியில் ஏகாம்பரநாதரை ஏலவார் குழலி அம்மை கைப்பிடித்ததனால் மாவடி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு திருமணமும் மாவடியில் நடப்பது சிறப்பெனக் கருதி அங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.
தெற்கு ராஜ கோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என மூன்று ராஜ கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயரபால் கட்டப்பட்டதாகும். பிருதிவி (பூமி, மண்) தலம் என்று பஞ்சபூதத்தலங்களில் காஞ்சி தனித்து பெயர் பெறுகிறது. கிழக்குத் திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சன்னதியில் மணல் லிங்கம் உள்ளது. கருவறை பிற்காலப்...காஞ்சிபுரம் நகரில் உயர்ந்த கோபுரம் கொண்ட திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயம் ஆகும். சங்கரமடம் வெகு அருகிலமைந்துள்ளது. ஏகம் ஆம்பரம் (ஒற்றை மாமரம்) தல விருட்சமாகக் கொண்ட திருக்கோயில் இதுவாகும். அத்தலவிருட்சத்தினடியில் ஏகாம்பரநாதரை ஏலவார் குழலி அம்மை கைப்பிடித்ததனால் மாவடி என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு திருமணமும் மாவடியில் நடப்பது சிறப்பெனக் கருதி அங்கு திருமணங்கள் நடைபெறுகின்றன.
தெற்கு ராஜ கோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என மூன்று ராஜ கோபுரங்களைக் கொண்டது இத்திருக்கோயில். தெற்கு ராஜ கோபுரம் கிருஷ்ணதேவராயரபால் கட்டப்பட்டதாகும். பிருதிவி (பூமி, மண்) தலம் என்று பஞ்சபூதத்தலங்களில் காஞ்சி தனித்து பெயர் பெறுகிறது. கிழக்குத் திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சன்னதியில் மணல் லிங்கம் உள்ளது. கருவறை பிற்காலப் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதற்குச் சான்றாக சோமாஸ்கந்தர் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது.
ஏகம்பத்தைத் திருவேகம்பம் என்று பாடல்கள் பாடுகின்றன. சுந்தரர் இடக்கண் பெற்ற திருத்தலம் இதுவாகும். 1, 2, 3ம் திருமுறையில் சம்பந்தர் 44 பாடல்களும், 4, 5, 6 திருமுறைகளில் அப்பர் 70 பாடல்களும் 7 ஆம் திருமுறையில் சுந்தரர் 11 பாடல்களும் 8ம் திருமுறையில் மாணிக்கவாசகர் ஒரு பாடலும் ஆக 126 பாடல்கள் பாடியுள்ளனர். காமிக ஆகம முறைப்படி பூசைகள் நடைபெறும் இத்திருக்கோயிலில் காலை 6 மணிக்கு உஷக்காலம் 8.30 மணிக்கு கால சந்தி 12 மணிக்கு உச்சிகாலம் மாலை 6 மணிக்கு பிரதோஷம், மாலை 7 மணிக்கு சாயரட்சை, 8.30 மணிக்கு அர்த்த ஜாமம் என ஆறு கால பூசைகள் நடைபெறுகின்றன.
இத்திருக்கோயிலுக்கு நான்கு தீர்த்தங்கள் உள்ளன. இத்திருக்கோயிலின் உட்புறம் 1) சிவகங்கை 2) கம்பா நதித் தீர்த்தம் (திருக்கோயிலமைவிடத்தின் கீழ் கண்கள் உணராவண்ணம் ஒன்றும் செல்வதாக ஐதீகம்) என்பவையும் வெளிப்புறம் சர்வ தீர்த்தம், மங்கள தீர்த்தம் என நான்கு தீர்த்தங்களும் உள்ளன. இத்திருக்கோயிலுக்கு அம்மன் மூலவர் சன்னதி கிடையாது. உற்சவர் மட்டும் உண்டு. உற்சவம் பெயர் அம்மை ஏலவார் குழலி ஆகும். ஐந்து பிரகாரங்கள் உடைய இத்திருக்கோயிலில் முதல் பிரகாரத்தில் பிரளயம் காத்த நாதர், 63 நாயன்மார்கள், சந்தான குரவர்கள், வெள்ளைக் கம்பர், மத்தள மாதேசுவரர், மார்க்கண்டேசர், கள்ளக் கம்பர், நல்லக் கம்பர், அகத்தீசர், சூரியன் ஆகியோருடன் வியத்தகு வகையில் நிலாத்துண்டப் பெருமாள் என்னும் 108 வைணவ திவ்விய தேசத்துள் ஒரு திவ்விய தேசமும் அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் விநாயகர், மாவடி, ஆயிரத்தெட்டு லிங்க சன்னதி, ஏலவார் குழலி சன்னதி, முருகர், நடராச சபை, பள்ளியறை ஆகியவை அமைந்துள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் தம்பட்ட விநாயகர் சன்னதி, விஷ்ணுவேசுவரர். கச்சி மயானம், வாலீசுரம், ரிசபேசம் என்ற சன்னதிகள் அமைந்துள்ளன. நான்காம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் விகட சக்கர விநாயகர், முருகர் சன்னதிகள் உள்ளன.
ஒவ்வொரு சோமவாரமும், பிரதோஷமும் சிறப்பானவை. சித்திரையில் திரு ஊஞ்சல் உற்சவம், வைகாசியில் விசாகம், ஆனியில்திருமஞ்சனம், ஆடியில் பவித்ரோத்சவம், ஆவணியில் நடசராசர் அபிஷேகம் மற்றும் மூலம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி தீபாவளி கந்தசஷ்டி, கார்த்திகை சோமவார லட்சதீபம், தை ரத சப்தமி, தெப்பத் திருவிழா, தைப்பூசம், மாசி மகா சிவராத்திரி, தவன உற்சவம் நடைபெறுகின்றன.
பங்குனி உத்திர பிரம்மோற்சவம் குறிப்பிடத்தக்க விழா ஆகும். பதிமூன்ற நாள் நடைபெறும் இவ்விழாவில் ஐந்தாம் நாள் அதிகார நந்தி சேவையும், ஆறாம் நாள் அறுபத்தி மூவர் திருவிழாவுடன் வெள்ளி ரத வீதி உலாவும், ஒன்பதாம் நாள் மாவடி சேவையும், பத்தாம் நாள் இரவு பங்குனி உத்திரத் திருக்கல்யணமும், பன்னிரண்டாம் நாள் பஞ்சமூர்த்தி புறப்பாட்டுடன் உற்சவம் நடைபெறும். அனைத்து சிவத்தலங்களிலும் பொதுத் துதியாக கூறப்படும் தென்னாடுடைய சிவனே போற்றி என்பனவற்றுள் ஏகம்பத்துறை எந்தாய் போற்றி எனப் போற்றும் தனிச்சிறப்புடைய சிவபெருமானை மணல் லிங்கமாயும் மாவடியில் கண்டு வணங்காமல் சிவனடியார் பிறவிப்பேறு எய்த இயலாது என்பர்.