அருள்மிகு சனத்குமரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், செ.புதூர் - 612203, தஞ்சாவூர் .
Arulmigu Sanathkumareswarar Temple, S.Puthur - 612203, Thanjavur District [TM018163]
×
Temple History
தல பெருமை
இத்திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் சுமார் 20கி.மீ. தொலைவில் கும்பகோணம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊர் இங்குள்ள ஐந்து ஊர்களுக்குப் பொதுவானதால், இது பொதுவூர் என்றாகி பினனாளில், வழக்கில் புதூர் என அழைக்கப்படுகிறது. பிற புதூர்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பதற்காக செங்காரன்குடி புதூர் என்று அழைக்கப்படுகிறது. இதனை சுருக்கமாக செ.புதூர் என்றும், ஆங்கிலத்தில் எஸ்.புதூர் என்றும் அழைக்கப்படுகின்றது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த.போது சங்கநிதி, பதுமநிதி உள்ளிட்ட ஐஸ்வர்யங்கள் அனைத்தும் தோன்றி ஸ்ரீமத் நாராயணனுடைய இதயக் கமலத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீமகாலெட்சுமியின் திருவடிகளில் சேர்ந்தன. அவற்றை அன்னை லெட்சுமிதேவியார் திருமாலிடம் அர்ப்பணித்தாள். எம்பெருமான் அவற்றைக் குபேரனிடம் தந்து, தர்மத்தின்படி அந்த ஐஸ்வர்யங்களைப் பரிபாலித்து வரும்படி அருள்புரிந்தார்.ஒருசமயம் குபேரன் தனது...இத்திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் சுமார் 20கி.மீ. தொலைவில் கும்பகோணம் காரைக்கால் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊர் இங்குள்ள ஐந்து ஊர்களுக்குப் பொதுவானதால், இது பொதுவூர் என்றாகி பினனாளில், வழக்கில் புதூர் என அழைக்கப்படுகிறது. பிற புதூர்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பதற்காக செங்காரன்குடி புதூர் என்று அழைக்கப்படுகிறது. இதனை சுருக்கமாக செ.புதூர் என்றும், ஆங்கிலத்தில் எஸ்.புதூர் என்றும் அழைக்கப்படுகின்றது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த.போது சங்கநிதி, பதுமநிதி உள்ளிட்ட ஐஸ்வர்யங்கள் அனைத்தும் தோன்றி ஸ்ரீமத் நாராயணனுடைய இதயக் கமலத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீமகாலெட்சுமியின் திருவடிகளில் சேர்ந்தன. அவற்றை அன்னை லெட்சுமிதேவியார் திருமாலிடம் அர்ப்பணித்தாள். எம்பெருமான் அவற்றைக் குபேரனிடம் தந்து, தர்மத்தின்படி அந்த ஐஸ்வர்யங்களைப் பரிபாலித்து வரும்படி அருள்புரிந்தார்.ஒருசமயம் குபேரன் தனது மனம் சபலத்தினால் ஒரு தவறை செய்து விட்டான். பாவம் உள்ள இடத்தில் செல்வம் எதுவும் நிரந்தரமாகத் தங்காது என்ற நியதியால் குபேரன் தர்மத்திலிருந்து நழுவியதால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் அவனை விட்டு நீங்கின.செல்வங்கள் அனைத்தையும் இழந்து, தான் செய்த தவறையும் எண்ணி, எண்ணி மனம் நொந்த குபேரன் சப்தரிஷிகளைக் கண்டு வணங்கி தான் உய்ய வழி அருளுமாறு மன்றாடினான். அவன்பால் இரக்கம் கொண்ட சப்தரிஷிகளும் திருத்தண்டிகைபுரம் என்று அழைக்கப்படும் இப்போது எஸ்.புதூர் எனப்படுகிறது இத்திருத்தலத்தில் உள்ள சோமதீர்த்தத்தில் நீராடி, இங்கு எழுந்தருளியிருக்கம் கருணை கடலான பெருமான் ஸ்ரீசனத்குமரேஸ்வரரையும், அகிலமெல்லாம் ஈன்றெடுத்து அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீசௌந்தர்நாயகியையும் தரிசித்துச் சரணடையும்படி அறிவுரை கூறி அருளினார்கள்.குபேரனும் மாசி மாதம் ஒரு நன்னாளில் இத்தலத்து சோமதீர்த்தத்தில் புனித நீராடி, அகிலமெல்லாம் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் அம்பிகைபாகனையும் அன்னை சௌந்தர்யநாயகியையும் பூசித்து அதன் பலனாக இழந்த தனது அஷ்ட ஐஸ்வர்யங்களையும் திரும்பப் பெற்று மகிழ்ந்தான்