Screen Reader Access     A-AA+
அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Chithragupthaswamy Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001817]
×
Temple History

தல வரலாறு

சித்திரகுப்தர் கோயில் , காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல பெருமை

சித்ரகுப்தசுவாமி கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவரான, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிக் கோயிலாக அமைந்த யம தர்மனின் கணக்கரான சித்ரகுப்தசுவாமி கர்ணகிஅம்பிகை திருக்கோயில் வரலாறு: பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார். உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில், காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்திரகுப்தனுக்கென்று தனி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது....