தல வரலாறு
கோயில் நகரமாம் குடந்தைக்கு தென்பால் காவேரியின் உபநதியான அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆற்றின் இடையில் நாச்சியார்கோயில் அருகில் அமைந்துள்ளது. நாச்சியார்கோயில், அ/மி. சீனிவாசப்பெருமாளின் வாகனமாகிய மூலவர் பறக்கும் கல் கருடனை நாச்சியார்கோயிலில் விஸ்வகர்மா கல்லில் வடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ராம பக்தர்கள் இராவணனை யுத்தம் செய்ய வேண்டி, இலங்கை செல்வதற்காக, சேது பந்தனத்தில் பாலம் கட்ட மிதக்கும் கற்களை செய்து தர வேண்டுகிறார்கள். அதை செய்ய விஸ்வகர்மா தன்னுடைய மகனான மயனை நியமிக்கிறார். அதன்பொருட்டு மயன் தன்னுடைய பணிக்கு உத்தரவு தரும்படி, சிவபெருமானையும் பார்வதியையும், வல்லநாயகி சமேத சேதுபுரீஸ்வரராக பிரதிஷ்டை செய்து வழிபட்டு, சேது பந்தனத்தில் பாலம் கட்ட மிதக்கும் கற்கள் செய்ததால், இவருக்கு இப்பெயராயிற்று.