Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஞானபுரிஸ்வரர் திருக்கோயில், திருமெய்ஞானம் - 612605, தஞ்சாவூர் .
Arulmigu Gnanapureeswarar Temple, Thirumeignanam - 612605, Thanjavur District [TM018174]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயில் அப்பர் , சுந்தரர் ஆகிய இருவரால் பாடல் பெற்ற பழமை வாய்ந்த திருக்கோயிலாகும் . மேலும் இத்திருக்கோயில் சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர் தமிழில் நால்வேதியூர் என்று வழங்க தொடங்கி நாலூர் என்று மருவியுள்ளது . வேதங்களில் சிறப்புற்று விளங்கிய இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை . ஐந்து மயான திருத்தலங்களுள் இதுவும் ஒன்று . இத்திருக்கோயில் திருப்பணி செய்யும் பொருட்டு மண்டல அளவிலான திருப்பணி கமிட்டியில் பரீசீலனைக்கு உட்படுத்தப்பட்டு மாநில அளவிலான கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது

தல பெருமை

9 மற்றும் 10 ம் நூற்றாண்டில் சோழ மன்னரான ஆதித்திய சோழ மன்னரால் கட்டப்பட்டது அப்பர் , சுந்தரர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகிய முவரால் பாடல் பெற்ற திருத்தலம் .