Screen Reader Access     A-AA+
அருள்மிகு காலகாலநாதசுவாமி திருக்கோயில், எருக்கட்டாஞ்சேரி - 609307, மயிலாடுதுறை .
Arulmigu Kalakalanathasway Temple, Erukkatancheri - 609307, Mayiladuthurai District [TM018215]
×
Temple History

தல வரலாறு

சிவபக்தியால் கூடாத காரியம் எதுவுமே இல்லை. சிவபெருமானை முழுமையாக நம்பி அவன் திருவடிகளில் சரணடைவோரைக் காலனும் நெருங்க அஞ்சுவான். இந்த அற்புதத்தை மார்க்கண்டேய மகரிஷி மூலம் உலகுக்கு உணர்த்தியவர் சிவபெருமான்.மார்க்கண்டேயன் மிகச் சிறந்த சிவபக்தன். 16 வயதுதான் தனது ஆயுள் என்ற வரத்தோடு பிறந்தவன். அவன் வாழ்க்கை முடியும் நாளில் அவனுக்கு இந்த உண்மையை அவன் பெற்றோர்கள் சொல்கிறார்கள். மார்க்கண்டேயரோ மனம் கலங்கவில்லை.தனது கடைசி நிமிடங்களில் இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கவேண்டும் என்றும், இறைவனின் திருவடிகளில் ஐக்கியமாகிவிடவேண்டும் என்று விரும்பினான். சிவலிங்க மூர்த்திக்குப் பூஜை செய்ய ஆரம்பித்தான். அப்போது காலன் அங்கு வந்தான். காலனைக் கண்டதும் மார்க்கண்டேயன் அஞ்சவில்லை.மாறாக, தான் யாருடைய திருவடிகளைப் புகலிடமாகக் கொண்டோமோ அவருடைய திருவடிகளையே பற்றிக்கொள்வோம் என்று நினைத்து,...