தல வரலாறு

கோடைக்காலம் என்பது நான்கு பருவகாலங்களில் வசந்தக்காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். நீண்ட பகல் மற்றும் குறைந்த இரவின் மூலம் இக்காலத்தை அறியலாம். புவியில் அமைந்துள்ள இடத்தின் அடிப்படையில் பருவகாலங்கள் வெவ்வேறு நாட்கள் மற்றும் வெவ்வேறு காலங்களில் தொடங்குகின்றன. பொதுவாகத் தென் அரைக்கோளத்தில் கோடைக்காலம் நிலவும் போது, வட அரைக்கோளத்தில் குளிர்க்காலம் நிலவும். வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் கோடைக்காலத்தின் போது ஈரமான பருவம் நிலவுகிறது. கோடைக்காலத்தில் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல கடல் பகுதிகளில் வெப்பமண்டலப் புயல்கள் உருவாகி நீடித்திருக்கும். கண்டங்களின் உட்பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இடி, மின்னல்கள் தோன்றி ஆலங்கட்டி மழையைத் தோற்றுவிக்கிறது.