Arulmigu Agneeswarar Temple, Nalladai - 609306, Mayiladuthurai District [TM018227]
×
Temple History
தல வரலாறு
1. ஸ்ரீமத் அகண்ட பரிபூர்ண சச்சிதானந்தமாம் கருணை தடங்கலாகிய சாஷாத் பரமசிவன் எழுந்தருளிய சிவஸ்தலங்கள் பல உளவாயினும் பூர்வமிமர் ஸகாகளாகிய தாருகாவன ரிஷிகளிலிருந்து ஆபிசார ஹோமம் வளர்த்து அரனை ஜெயித்திட எண்ணி முயல்கள், ஆல, கபால டமருகன் மான், மழ, கட்செவி, புலிகரி முதலியவைகளை மந்திர பலத்தால் சிருஷ்டித்து அனுப்பியதை எமது காள கண்ட திரு நேத்ர சதுர்புஜ சந்திர ஜடாதர கங்கா சம்புவாகிய எந்தையாா் அவைகள் அனைத்தையும் ஸம்ஹரித்து தாருகாவின முனிவர்களால் பரமசிவம் பேரில் ஏவிவிட புலியை வேடன் எதிர் சென்று யுத்தம் செய்து அவனால் முடியாமல் படிக்கு இவ்வூர் வந்ததும் ஒரு வில்வ மரத்தில் தனக்கு ஒரு அபாயமும் அணுகாமலிருக்கும்படி ஒவ்வொரு வில்வமாக கொய்து சிவபெருமான் மனதினால் தியானம் பண்ணி...1. ஸ்ரீமத் அகண்ட பரிபூர்ண சச்சிதானந்தமாம் கருணை தடங்கலாகிய சாஷாத் பரமசிவன் எழுந்தருளிய சிவஸ்தலங்கள் பல உளவாயினும் பூர்வமிமர் ஸகாகளாகிய தாருகாவன ரிஷிகளிலிருந்து ஆபிசார ஹோமம் வளர்த்து அரனை ஜெயித்திட எண்ணி முயல்கள், ஆல, கபால டமருகன் மான், மழ, கட்செவி, புலிகரி முதலியவைகளை மந்திர பலத்தால் சிருஷ்டித்து அனுப்பியதை எமது காள கண்ட திரு நேத்ர சதுர்புஜ சந்திர ஜடாதர கங்கா சம்புவாகிய எந்தையாா் அவைகள் அனைத்தையும் ஸம்ஹரித்து தாருகாவின முனிவர்களால் பரமசிவம் பேரில் ஏவிவிட புலியை வேடன் எதிர் சென்று யுத்தம் செய்து அவனால் முடியாமல் படிக்கு இவ்வூர் வந்ததும் ஒரு வில்வ மரத்தில் தனக்கு ஒரு அபாயமும் அணுகாமலிருக்கும்படி ஒவ்வொரு வில்வமாக கொய்து சிவபெருமான் மனதினால் தியானம் பண்ணி அர்ச்சித்ததின் பேரில் சிவபெருமான் கிருபை கூர்ந்து வேடரூபமாய் திருவவதாரம் செய்து பின்பு அந்த வேடனுக்கு முக்தியளித்து அந்த வியாக்ர சர்பத்தை ஆடையாக அணிந்து நின்றனர். 2. மிருகண்ட ரிஷி மைந்தனை விரும்பி எந்தையர் மங்கை பாகனிடம் வரம் பெற்று இத்தரமேஷ புத்ர காமேஷ்டியாகம் பண்ணி மார்க்கண்டனை பெறுவதற்கு யாகத்தின் பொருட்டு திரவியத்திற்காக விசித்ர வீரிய சோழனிடம் யாசிக்க மன்னன் மனமகிழ்ந்து முனிபுங்கவர் வேண்டும் பொருளிப்பதன்றி சமுகத்திலிருந்து யாகத்தை யாதொரு பின்னம் வராது வளர்ப்போம் என்றும் பொருளும் அளித்து இத்தலம் வந்து இழ்ப்பால் ஹோமகுண்டம் நியமித்து மாசி மாதம் சிவராத்திரியன்று யாகம் ஆரம்பித்து முன்று காலம் பூர்ணகுதியாகி 4வது காலம் பூர்ணகுதி கொடுக்கும் காலத்தில் சாலிய மாமுனிவர் என்ற சிவனடியாா் நவரத்னமாக கஜிதமான பரிசுத்த பட்டாடை ஒன்றை மன்னரிடம் உபசரித்தனர். அதை ஏற்ற செங்கோல் மன்னன் ரிஷிகளிடம் அளித்தனர். முனிவர் அந்த நல்லாடையை பூர்ணகுதியுடன் சோ்த்து ஹோமத்தியிலிட்டனர். அதைக் கண்ட சாலிய மாமுனிவர் தங்களுக்கு அளித்த பட்டாடையை தீயிலிடவோ அளித்தேன் என மனம் சோா்ந்தார். முனிவர் பரமசிவ பக்தா உம் ஆடையை அக்னிக்களித்ததன்று அறனுக்கே அளித்தனம் நாளை அறனிடம் காண்பாய் எனவும், மறுநாள் அவ்வண்ணமே செவ்வண்ணம் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அரன் திருமேனியில் கண்டு ஆனந்தம் கண்டு துதித்து அன்பாா்க்கெளியன் அருள் சுரந்து நல்லாடை தரித்த நாதரே என பிராத்தித்தனர். அதுமுதல் மணிவரம் வன்னியூர் என்ற இவ்வூர் நல்லாடை என வழங்கி வருகிறது. 3. முன்னோர் காலத்தில் தேஜஸை சிவாக்னியால் சுமந்து சென்ற அக்னி பகவானை உமயவள் நோக்கியவ பரமசிவம் அறிந்து நான் ஏற்கத் தக்கதை நீ ஏற்றமையால் உன் தேஜஸை அழியக் கடவதே என்று சபிக்க சாபம் பெற்ற அக்கினி பகவான் சிவனை எண்ணி போற்றி பிரார்த்தித்து அறியாமற் செய்த பிழையை பொருத்தருள வேண்டுமென பிரார்த்தித்தார். அசரிரியாக கிருத்திகா மாதத்தில் 4 ஞாயிற்றுக் கிழமையிலும் உதய காலத்திலும் இவ்வூருக்கு தெற்காலிருக்கும் தடாகத்தில் ஸ்நானம் பண்ணால் தேஜஸை பெறலாம் எனச் சொல்ல, அதைக் கேட்ட அக்கினி பகவான் காா்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தினம் தோறும் உதயகாலத்தில் ஸ்நானம் பண்ணினதும் தன் சாபம் நிவர்த்தியாகி தேஜஸைக் கண்ட அக்கினி பகவான் மனமகிழ்ந்து பகவானை ஸ்தோத்திரம் பண்ணி நான் சாபத்தை போக்கி தேஜஸைப் பெற்றதுபோல் இம்மாதம் 4 ஞாயிற்றுக் கிழமையிலும் ஸ்நானம் பண்ணின யாவர்க்கும் அவரவர் தீர்த்தும் தாங்கள் நாமதேயம் அக்னீஸ்வரர் என்றும், இத்தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்று இருக்க வேண்டும் என பிராத்தித்தனர். அதுமுதல் ஸ்வாமிக்கு அக்னீஸ்வரர் என பெயர் வழங்கி வருகிறது. 4. இன்னும் இந்திரன் விஷ்ணு பூஜித்த ஸ்தலம் சோழராஜாவுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான ஸ்தலம். இன்னும் பலவான விசேஷங்கள் உள்ளது.