தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம், செம்பனர்கோயில், கிராமம், அருள் மிகு, ஸ்வர்ணாபுரிஸ்வரர் திருகோயில், கோச்செங்கசோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இஸ்தலம்.திருப்பறியலூர் தட்சன் யாகத்தை அழிக்க தாட்சயாணி வேண்டுகோளுக்கிணங்க வீரபத்திரர் மற்றும் காளியை தோற்றுவித்த ஸ்தலம். திருப்பறியலூர் தட்சன் யாகத்தை அழிக்க தாட்சயாணி வேண்டுகோளுக்கிணங்க வீரபத்திரர் மற்றும் காளியை தோற்றுவித்த இஸ்தலத்தில் வீரபத்திரருடன் தச்சன் ஆட்டுத்தலை முகத்துடன் காட்சியளிப்பார். சூரியனால் பூஜிக்கப்பட்ட இஸ்தலம் . இத்திருக்கோயில் 7-8ம் நூற்றாண்டை சேர்ந்த திருக்கோயிலாகும்.இஸ்தலத்தின் சிறப்பு - திருமணமாகாதவர்கள் மறுவார்குழலி அம்மனிடம் வேண்டிகொண்டால் உடனடியாக திருமணம் நடைபெறும்