தல வரலாறு
நாகப்பட்டினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம் , மயிலாடுதுறையில் இருந்து பொறையார் செல்லும் வழியில் 13 கிமீ தொலைவில் ஆக்கூர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கோச்செங்கசோழன் அமைத்த 70 மாடக்கோயில்களில் இத்தலமும் ஒன்று .இத்திருக்கோயில் 10 மற்றும் 11 ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்ததாகும்.சிறப்புலிநாயனார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்ததில் 999 நபர்கள் மட்டும் வந்தனர் நாயனார் இறைவனிடம் வேண்ட ஆயிரத்தில் ஒருவராக சுவாமி எழுந்தருளினார். எனவே இக்கோயிலில் ஆயிரம் பேருக்கு ஒவ்வொரு வருடமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.