தல வரலாறு
நாகப்படடினம் மாவட்டம் , தரங்கம்பாடி வட்டம், திருக்களாச்சேரி கிராமம், நாகநாதஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ நாகநாத சுவாமி தேவஸ்தானம் திருக்களாச்சேரி கோவில் ஸ்தல வரலாறு திரு கயிலையில்திரு சிவபிரானின் சாபத்திலும் திரு அம்பிகை திருக்குராமரம் உருவத்திலும் திரு மஹாவிஷ்ணு நாகப்பாம்பு உருவாகவும், சாபம் பெற்று இத்தலத்தில் அந்த சாப விடுதலை பெறுவதற்குக்காக தவம் இருந்து சிவபிரானை வழிபட்டு அம்பிகை கார்த்திகைஞாயிற்று கிழமை தினத்திலும் சந்திர புஷ்காரணியில் தீர்த்த மாடியும், திருமால் பங்குனி உத்திரத்ததன்று ஞானதீர்த்தத்திலும் சுய உருவம் பெற்றதாக இத்தல வரலாறு கூறுகின்றது. அம்பிகை திருகுராமரமாக இருந்து வழிபட்ட தால் இத்தலம் திருகுறாச்சேரி விஷ்ணு நாகபாம்பாக விழிப்பட்டதால் சுவாமியை ஸ்ரீநாகநாத சுவாமி என்றும் அழைக்கப்படுகிறது.