அருள்மிகு வதான்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வள்ளலார் கோயில் - 609001, மயிலாடுதுறை .
Arulmigu Vadhaneswara Swmay Temple, Vallarkoil - 609001, Mayiladuthurai District [TM018259]
×
Temple History
தல பெருமை
மயிலாடுதுறை மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையது. முத்தித்தலங்களில் ஒன்றாய்த் திகழ்வது.
ஞானசம்பந்தர், அப்பர் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற ஸ்ரீ அபயாம்பிகையம்மை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம், ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், பஞ்சவிசுவநாதர் ஆலயங்கள், ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி விளங்கும் வள்ளலார்கோயில், ஸ்ரீ சப்தமாதர்கள்கோயில் முதலிய ஆலயங்களைக்கொண்டு விளங்குவது.
இங்கு ஐப்பசித்திங்கள் முழுதும் நிகழும் துலாமாத நீராட்டும் அத்திங்கள் இறுதியில் நடைபெறும் கடைமுக தீர்த்த விழாவும் எல்லோராலும் நன்கறியப்பட்டவை.
இத்தலத்தில் காவிரி வடகரையில் விளங்கும் குருத்தலமாகிய ஸ்ரீ வள்ளலார்கோயிலும், காவிரித் தென்கரையில் விளங்கும் ஸ்ரீவிசுவநாதர் திருக்கோயிலும், ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் விளங்கும் முருகப்பெருமானுக்குரிய குமரக்கட்டளையும் தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவன. ஸ்ரீ வள்ளலார்கோயில் நவக்கிரகத்தலங்களில் குருத்தலமாகப் போற்றப்படுவது. இங்கு விளங்கும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி...மயிலாடுதுறை மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையது. முத்தித்தலங்களில் ஒன்றாய்த் திகழ்வது.
ஞானசம்பந்தர், அப்பர் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற ஸ்ரீ அபயாம்பிகையம்மை உடனாகிய ஸ்ரீ மாயூரநாதர் ஆலயம், ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயில், பஞ்சவிசுவநாதர் ஆலயங்கள், ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி விளங்கும் வள்ளலார்கோயில், ஸ்ரீ சப்தமாதர்கள்கோயில் முதலிய ஆலயங்களைக்கொண்டு விளங்குவது.
இங்கு ஐப்பசித்திங்கள் முழுதும் நிகழும் துலாமாத நீராட்டும் அத்திங்கள் இறுதியில் நடைபெறும் கடைமுக தீர்த்த விழாவும் எல்லோராலும் நன்கறியப்பட்டவை.
இத்தலத்தில் காவிரி வடகரையில் விளங்கும் குருத்தலமாகிய ஸ்ரீ வள்ளலார்கோயிலும், காவிரித் தென்கரையில் விளங்கும் ஸ்ரீவிசுவநாதர் திருக்கோயிலும், ஸ்ரீ மாயூரநாதர் ஆலயத்தில் விளங்கும் முருகப்பெருமானுக்குரிய குமரக்கட்டளையும் தருமை ஆதீன அருளாட்சியில் விளங்குவன. ஸ்ரீ வள்ளலார்கோயில் நவக்கிரகத்தலங்களில் குருத்தலமாகப் போற்றப்படுவது. இங்கு விளங்கும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி மிக்க சிறப்புடையவர். நந்திதேவர்க்குச் சிவஞானோபதேசம் செய்யும் நிலையில் விளங்குபவர்.
காவிரித் தென்கரையில் ஸ்ரீ காசியமைப்புடைய திருக்கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீ விசுவநாதரும் ஸ்ரீ விசாலாட்சியும், திருமலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி மூர்த்தியும் பலரும் போற்றி வழிபட்டு அருள் பெறும் மூர்த்திகளாவர்.