Screen Reader Access     A-AA+
அருள்மிகு கண்ணாயிரமுடையார் ஆலயம், Gurumanakkudi - 609117, மயிலாடுதுறை .
Arulmigu Kannayiramudayar Temple, Gurumanakkudi - 609117, Mayiladuthurai District [TM018267]
×
Temple History

தல பெருமை

வாமனாவதாரத்தில் மஹாபலியிடம் மூவடி மண் இரந்து பெற்று உலகளந்த திருமால் செருக்கை ஒடுக்கி நெற்றியிலிருந்து ரத்தம் இறுத்த சிவபெருமானை வழிபாட்டு அருள் பெற்ற தலமாகையால் குமாணிக்குடி என்பது குறுமாணக்குடி என மருவித்தலத்தின் வழங்கும் பெயராயிற்று.கௌதம முனிவரின்சா பத்தால் பீடிக்கப்பட்ட தேவேந்திரன் இத்தலத்தை வந்தடைந்து தவம் செய்தான். அதன் பயனாக அவனது உடலில் இருந்த ஆயிரம் யோனிகளும் ஆயிரம் கண்களாக மாறின. அதனால் இறைவனுக்குக் கண்ணாயிர நாதர் என்ற நாமம் வந்தது.மகாபலி என்ற மன்னனை வெல்லுமாறு தேவர்கள் வேண்ட, திருமால் வாமன அவதாரம் எடுத்தார். குறு மாண் ( குள்ளமான பிரமச்சாரி) வடிவில் தோன்றி, மாபலியிடம் சென்று மூவடி மண் யாசித்தார். தனது குருவான சுக்கிராச்சாரியார் தடுத்தும் கேளாமல் மூன்றடி மண்...