Screen Reader Access     A-AA+
அருள்மிகு சர்வசக்தி மாரியம்மன் திருக்கோயில், சுவாமிமலை, Swamymalai - 612302, தஞ்சாவூர் .
Arulmigu Sarvasakathimariyamman Temple, Swamimalai, Swamymalai - 612302, Thanjavur District [TM018291]
×
Temple History

தல பெருமை

சோழ வள நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்கோயில் பெருநகரமான கும்பகோன மாநகரத்தில் காவேரிக்கரைக்கு வடக்கே சுவாமிமலை இராஜவீதிக்கு வடக்கே அருள்மிகு ஸ்ரீசர்வசக்தி மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஸ்ரீ சர்வசத்தி மாரியம்மன் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சியளித்து, அருள் பாலிக்கிறார். மகாமண்டபத்தின் முன் தென்கிழக்கே ஸ்ரீ விநாயகர் சன்னதி, தெற்கு பிரகாரத்தில் ஸ்ரீ காளியம்மன் சன்னதி, வடக்கு பிரகாரத்தில் ஸ்ரீ பேச்சியம்மன் சன்னதி, மதுரை வீரன் சன்னதி ,அம்மன் சன்னதி முன்பு பலிவிடம் அமைந்துள்ளது. காலரா, அம்மை போன்ற கொடிய நோய்களிலிருந்தும், கண் மற்றும் உடற்கூறுகளில் ஏற்படுமூ கோளாறுகள் இவற்றை எல்லாம் நீக்கும் அருட்பேராற்றல் ஸ்ரீ சர்வசக்தி மாரியம்மனுக்கு உண்டு. மனப்பிணிகள் திர்க்கவருவாரும் மனவினை போக்கு நாடி வருவாரும் திருமண...