Arulmigu Senganmaleswarar Temple, Kelampakkam - 603103, Chengalpattu District [TM001841]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயிலில் முன்னொரு காலத்தில் மகா விஷ்னு பகவான் சக்ராயுதத்தைப் பெறுவதற்காக 1008 தாமரை மலர்களால் சிவனை வழிபடத் தொடங்கினார். இவ்வழிபாட்டின் போது சிவபெருமான் தோன்றி மகா விஷ்னுவிடம் இருந்த கடைசி மலரை மறையச் செய்தார். மகா விஷ்ணு பகவான் கடைசிப் பூவைக் காணும் போது, காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அப்போது சிறிதும் யோசிக்காமல், விஷ்ணு தன் கண்ணில் ஒன்றைப் பிடுங்கி, சிவபெருமானுக்கு அர்ப்பணித்து, பூஜையை முடித்தார் அவரது உறுதியால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி, தெய்வீக சக்ராயுதத்தைக் கொடுத்தார். விஷ்ணு (செங்கன்மால் விஷ்ணுவின் மற்றொரு பெயர்) இங்கு சிவனை வழிபட்டதால், சிவபெருமான் செங்கண்மாலீஸ்வரர் என்றும், இத்தலம் செங்கண்மால் என்றும் அழைக்கப்பட்டது . மூலவர் செங்கன்மாலீஸ்வரர் என்றும், தாயார் பெரிய...இத்திருக்கோயிலில் முன்னொரு காலத்தில் மகா விஷ்னு பகவான் சக்ராயுதத்தைப் பெறுவதற்காக 1008 தாமரை மலர்களால் சிவனை வழிபடத் தொடங்கினார். இவ்வழிபாட்டின் போது சிவபெருமான் தோன்றி மகா விஷ்னுவிடம் இருந்த கடைசி மலரை மறையச் செய்தார். மகா விஷ்ணு பகவான் கடைசிப் பூவைக் காணும் போது, காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அப்போது சிறிதும் யோசிக்காமல், விஷ்ணு தன் கண்ணில் ஒன்றைப் பிடுங்கி, சிவபெருமானுக்கு அர்ப்பணித்து, பூஜையை முடித்தார் அவரது உறுதியால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி, தெய்வீக சக்ராயுதத்தைக் கொடுத்தார். விஷ்ணு (செங்கன்மால் விஷ்ணுவின் மற்றொரு பெயர்) இங்கு சிவனை வழிபட்டதால், சிவபெருமான் செங்கண்மாலீஸ்வரர் என்றும், இத்தலம் செங்கண்மால் என்றும் அழைக்கப்பட்டது . மூலவர் செங்கன்மாலீஸ்வரர் என்றும், தாயார் பெரிய நாயகி / பிருஹன் நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் கண் சம்பந்தமான நோய்களுக்கு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது.