Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், Paruthicheri - 612605, தஞ்சாவூர் .
Arulmigu Kothandaramer Temple, Paruthicheri - 612605, Thanjavur District [TM018610]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் உள்ள கோதண்டராமரின் இடதுகாலில் ஒரு ரக்ஷை உள்ளது . இது மிகவும் அரிய அமைப்பாகும் . முன்பொருமுறை ஸ்ரீராமர் சீதா பிராட்டி மற்றும் இலட்சுமணர் துணையுடன் தண்டகாருண்ய வனத்திற்கு சென்றார் . அந்த வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் பெருமாளின் நலன் கருதி அவரது இடது காலில் ஒரு ரக்ஷையை கட்டி அவரை வணங்கினார்கள் . பக்தர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கி பெருமாளும் அந்த ரக்ஷையை ஏற்று அருளினார் என்பது ஐதிகம் . மேலும் உற்சவ மூர்த்தி பெருமாளின் திருமார்பில் மகாலட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது .