தல பெருமை
பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏனநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இத் தலம் ஒரு தேவார வைப்பு தலம். தற்போது ஏனநல்லூர் என்று அழைக்கப்படும் இத்தலத்தின் பழைய பெயர் எயினனூர்.இது ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம் ஆகும். இங்கு கற்பகாம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.