அருள்மிகு பிடாரி மாங்காளியம்மன் சித்தி விநாயகர் திருக்கோயில், அண்ணாநகர், சென்னை - 600040, சென்னை .
Arulmigu Pidari Mangaliamman And Sidhi Vinayagar Temple, Anna Nagar, Chennai - 600040, Chennai District [TM000188]
×
Temple History
தல வரலாறு
அமைவிடம்
சென்னை மாநகரின் அண்ணா நகரில் நடுவக்கரை எனும் பகுதியில் சாந்தி காலனி மூன்றாவது பிரதான சாலையில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னே நடுவக்கரை கிராம தேவதையாக இருந்த அருள்மிகு பிடாரி மங்காளியம்மன் மட்டும் சன்னதி கொண்டு கிராம மக்களை காத்து அருள் புரிந்து வந்தாள். சென்னை மாநகர விரிவாக்கத்தை போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினால் அண்ணா நகர் உருவாக்கப்பட்டது திருக்கோயில் அமைந்திருந்த இடம் மட்டும் திருக்கோயில் உபயோகத்திற்காக விடப்பட்டது. அண்ணா நகரில் வசிக்கும் மக்களால் 1974- ல் அருள்மிகு சித்தி விநாயகர் சன்னதியும் 1991- ல் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் சன்னதி அருள்மிகு காமாட்சி அம்மன் சன்னதி அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி சன்னதி...அமைவிடம்
சென்னை மாநகரின் அண்ணா நகரில் நடுவக்கரை எனும் பகுதியில் சாந்தி காலனி மூன்றாவது பிரதான சாலையில் அமைந்துள்ளது . இத்திருக்கோயில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னே நடுவக்கரை கிராம தேவதையாக இருந்த அருள்மிகு பிடாரி மங்காளியம்மன் மட்டும் சன்னதி கொண்டு கிராம மக்களை காத்து அருள் புரிந்து வந்தாள். சென்னை மாநகர விரிவாக்கத்தை போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தினால் அண்ணா நகர் உருவாக்கப்பட்டது திருக்கோயில் அமைந்திருந்த இடம் மட்டும் திருக்கோயில் உபயோகத்திற்காக விடப்பட்டது. அண்ணா நகரில் வசிக்கும் மக்களால் 1974- ல் அருள்மிகு சித்தி விநாயகர் சன்னதியும் 1991- ல் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் சன்னதி அருள்மிகு காமாட்சி அம்மன் சன்னதி அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி சன்னதி அருள்மிகு பக்த ஆஞ்சநேயர் சன்னதி மற்றும் நவகிரக சன்னதி ஆகியவைகள் அமைக்கப்பட்டன.
இராஜகோபுரம்
இத்திதிருக்கோயில் ஐந்து நிலை இராஜகோபுரம் உபயதாரர்களால் 2003 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
பூஜை காலங்கள்
இத்திருக்கோயில் இரண்டு கால நித்திய பூஜைகளும் மாதாந்திர உற்சவங்களும் பிரதோஷ வழிபாடு மாலை 3.00 . மணிக்கு சிவன் காமாட்சி அம்மன் நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்று ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் உள்புறப்படு நடைபெறுகிறது .பிரதி மாதம் அமாவாசை பௌர்ணமி அன்று பிடாரி மங்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும் .ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தி அன்று சித்தி விநாயகருக்கு காலை 6.00 மணிக்கு மகா கணபதி ஹோமமும் மாலை 5.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று மூஷிக வாகனத்தில் சித்தி விநாயகர் உள்புறப்படு நடைபெறும். கிருத்திகை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 7.00 மணிக்கு அபிஷேகமும் மாலை 6.00 மணிக்கு சுவாமி உள்புறப்படு நடைபெறும் . ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு மூல நட்சத்திரம் அன்று காலை 7.00 அபிஷேகமும் மாலை உள்புறப்படு நடைபெறும்.
திருக்கோவிலின் முக்கிய திருவிழாக்கள்
சித்திரை மாதம் - ஸ்ரீ சித்தி விநாயகர் சுவாமிக்கு தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏக தின லட்சர்ச்சனையும் சிறப்பு சந்தன காப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறும். ஸ்ரீ காமாட்சி அம்மன் சுவாமிக்கு மகா சண்டி ஹோமம் முதல் நாள் நவாவரண பூஜையும் தேவி மஹாத்ம்யம் பாராயணம் பலி போடுதல் மற்றும் பிரசாத விநியோகமும் நடைபெறும். இரண்டாம் நாள்- மகா சண்டி ஹோமம் கலச அபிஷேகம் அலங்காரம் தீபாராதனையும் நடைபெறும். ஸ்ரீ பிடாரி மங்காளியம்மன் சுவாமிக்கு மாலை 6.00 மணிக்கு மேல் புஷ்ப அலங்காரமும் திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.
வைகாசி மாதம் - ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சத்ரு ஸம்கார ஹோமம் சற்று ஸம்ஹார அர்ச்சனையும் நடைபெறும். மஹாலிங்கேஸ்வர சுவாமிக்கு ஸ்ரீ ருத்ர பாராயணமும் ருத்ர ஹோமமும் நடைபெறும்.
ஆனி மாதம் - ஸ்ரீ சிவகாமி அம்பிகை சமேத நடராஜ சுவாமிக்கு மாலை 6.00 மணி அளவில் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெறும்.
ஆடி மாதம் - ஸ்ரீ பிடாரி மாங்காளியம்மன் சுவாமிக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் நான்காவது ஞாயிறுக்கிழமை அன்று ஆடித்திருவிழா நடைபெறும். அதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று பால்குட அபிஷேகம் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் தீபாராதனையும் நடைபெறும்.ஞாயிறுக்கிழமை கூழ்வார்த்தல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மாலை வெகு விமர்சையாக பிடாரி மாங்காளியம்மன் திருவீதி உலா நடைபெறும்.ஸ்ரீ காமாட்சி அம்மன் சுவாமிக்கு மடி கட்டுதல் வளையல் அலங்காரம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் நடைபெறும்.
ஆவணி மாதம் - ஸ்ரீ சித்தி விநாயகர் சுவாமிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல் நாள் 1008 கொழுக்கட்டை 108 தாமரை பூக்கள் 108 கொப்பரை தேங்காய் 108 ஹோம திரவியத்துடன் ஹோமம் நடைபெறும். மறுநாள் சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்று உடன் சித்தி விநாயகர் திருவீதி உலா நடைபெறும்.
புரட்டாசி மாதம் - ஸ்ரீ பிடாரி மாங்காளியம்மன் சுவாமிக்கு காலை மாலை என இரு வேளையும் அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.நவராத்திரியை முன்னிட்டு காமாட்சி அம்மனுக்கு தினமும் காலை அபிஷேகமும் மாலை 12 தினங்கள் சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெறும். விஜயதசமி அன்று அம்பு உற்சவம் மறுநாள் ஊஞ்சல் உற்சவமும் லட்சர்ச்சனையும் நடைபெறும்.
ஐப்பசி மாதம் - ஸ்ரீ மஹாலிங்கேஸ்வர சுவாமிக்கு அன்ன அலங்காரம் அன்னாபிஷேகம் நடைபெறும் . சுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி முன்னிட்டு தினமும் காலை அபிஷேகமும் மாலை சந்தன காப்பு அலங்காரம் 6 நாட்களுக்கு நடைபெறும் .கந்த சஷ்டி சூரஸம்ஹரம் நிகழ்ச்சி நடைபெறும் மறுநாள் காலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
கார்த்திகை மாதம் - ஸ்ரீ மகாலிங்கேஸ்வர சுவாமிக்கு ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். கார்த்திகை முதல் வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை தொடர் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும். கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை நடைபெறும்.வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி திருவீதி உலா நடைபெறும்.
மார்கழி மாதம் - மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு மாலை அபிஷேகமும் மறுநாள் காலை ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவீதி உலா நடைபெறும். ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு ஹனுமான் ஜெயந்தியை முன்னிட்டு நவசாந்தி ஹோமம் திருவீதி உலா மற்றும் லட்சார்ச்சனை நடைபெறும் . ஸ்ரீ மஹாலிங்கேஸ்வர சுவாமிக்கு ஏக தின லட்சார்ச்சனை நடைபெறும்.
தை மாதம் - காமாட்சியம்மன் சுவாமிக்கு தை அமாவாசை முன்னிட்டு அபிராமி அந்தாதி படித்து மாலை 1008 தீபம் காமாட்சிஅம்மனுக்கும் 108 தீபம் ஆதி மாங்காளி அம்மனுக்கும் ஏற்றப்படும்.
மாசி மாதம் - ஸ்ரீ மஹாலிங்கேஸ்வர சுவாமிக்கு சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால அபிஷேகமும் ஹோமமும் நடைபெறும்.
பங்குனி மாதம் - ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு தொடர் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை நடைபெறும். வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கும் காமாட்சி உடனுறை ஸ்ரீ மஹாலிங்கேஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.
கும்பாபிஷேகம்- அருள்மிகு பிடாரி மாங்காளியம்மன் மற்றும் சித்தி விநாயகர் சுவாமிக்கு 1974- ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது 1991- ல் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் காமாட்சி அம்மன் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் நவகிரகம் ஆகிய சன்னதிகளுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது . ௨௩- ல் ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அனைத்து சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது . 2006 - ல் அனைத்து சன்னதிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நடை திறப்பு - காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையும் ,
செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையும்,
வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையும் நடை திறக்கப்படும்