புராண பின்புலம்
கருனையின் வடிவாக இறைவன் அருள் வழங்குவதால் இத்தலத்து இறைவன் காருண்யேஸ்வரா் என்றும் இறைவி காருன்யநாயகி என்ற திருநாமம் பெற்றுள்ளனர். இத்திருத்தலத்தில் அமைந்துள்ள சித்தர் பீட நாயகி அம்மன் உலக்கையால்(கழுக்கானி) தன்னை அடித்து கொண்டு பிள்ளை வரம் பெற்றதால் கழுக்கானி முட்டம் என்றும் கிருஷ்ணர் இத்தலத்து இறைவனை வழிப்பட்டதால் கிருஷ்ணாபுரம் என்ற பெயரும் உண்டு என கூறப்படுகிறது.