புராண பின்புலம்
இத்திருக்கோயில் வில்லியவரம்பல் கிராமத்தில் அமைந்துள்ள வைணவ திருக்கோயிலாகும். வைகானச ஆகம சம்பிரதாயப்படி தினமும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் கிராம மக்களின் இ்ஷ்ட தெய்வமாகவும்.வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் பிரார்த்தனை மூர்த்தியாகவும் அருள்பாலித்து வருகிறார்