எந்நாட்டிலும் சிறந்த நன்னாடாகிய சோழவள நாட்டில் குடமூக்கு மற்றும் திருவிடைமருதூர் புண்ணிய சேத்ரங்களுக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையின் வடபுறம் நரசிங்கன்பேட்டை என்ற கிராமம் உள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த இத்திருதலத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , அருள்மிகு ஓதி வைத்த விநாயகர் திருக்கோயில் ,அ ருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் ஆகிய எண்ணிலடங்காத கிராம தேவதைகள் நம் குலம் காக்க தோன்றி வேண்டிய அனைவருக்கும் வேண்டிய வரங்களை தந்தருளி காத்து வருகின்றன.
அருள்மிகு அங்காளம்மன் குலத்தை காக்கும் தெய்வமாகவும், நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டுவோர் வேண்டும் வண்ணம் சக்தி படைத்த தெய்வமாக அருள்பாலித்து...எந்நாட்டிலும் சிறந்த நன்னாடாகிய சோழவள நாட்டில் குடமூக்கு மற்றும் திருவிடைமருதூர் புண்ணிய சேத்ரங்களுக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையின் வடபுறம் நரசிங்கன்பேட்டை என்ற கிராமம் உள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த இத்திருதலத்தில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் , அருள்மிகு ஓதி வைத்த விநாயகர் திருக்கோயில் ,அ ருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில், அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் ஆகிய எண்ணிலடங்காத கிராம தேவதைகள் நம் குலம் காக்க தோன்றி வேண்டிய அனைவருக்கும் வேண்டிய வரங்களை தந்தருளி காத்து வருகின்றன.
அருள்மிகு அங்காளம்மன் குலத்தை காக்கும் தெய்வமாகவும், நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டுவோர் வேண்டும் வண்ணம் சக்தி படைத்த தெய்வமாக அருள்பாலித்து வருகிறார்.
துஷ்டசக்தி (தீய சக்தி) அனுகாமல் பக்தர்களை காத்து வருகிறார்.
அம்பாளை மனமுருகி வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்-கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருமண தடைகள் நீங்கும்.
பில்லி சூனியம் ஏவல் செய்னை போன்ற எண்ணிலடங்காத பிரச்சனைகளை பக்தர்களுக்கு தீர்த்து வைப்பார்