Arulmigu Mariamman Temple, Narasinganpettai - 609802, தஞ்சாவூர் .
Arulmigu Mariamman Temple, Narasinganpettai - 609802, Thanjavur District [TM019170]
×
Temple History
தல வரலாறு
எந்நாட்டிலும் சிறந்த நன்னாடாசிய சோழவள நாட்டில் குடமூக்கு மற்றும் திருவிடைமருதூர் புண்ணிய ஷேத்ரங்களுக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையின் வடபுறம் நரசிங்கன் பேட்டை என்ற கிராமம் உள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த இத்திருதலத்தில் அருள்மிகு ஓதி வைத்த விநாயகர் , அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் , அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் , அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் என எண்ணிலங்காத கிராம தேவதைகள் நம் குலம் காக்க தோன்றி வேண்டிய அனைவருக்கும் வேண்டிய வரங்களை தந்தருளி காத்து வருகின்றன.
இவ்வூரின் மத்தியில் அன்னை பார்வதி தேவி மகா மாரியம்மனாக அவதாரம் எடுத்து...எந்நாட்டிலும் சிறந்த நன்னாடாசிய சோழவள நாட்டில் குடமூக்கு மற்றும் திருவிடைமருதூர் புண்ணிய ஷேத்ரங்களுக்கு கிழக்கே காவிரி ஆற்றங்கரையின் வடபுறம் நரசிங்கன் பேட்டை என்ற கிராமம் உள்ளது. பழமையும் பெருமையும் வாய்ந்த இத்திருதலத்தில் அருள்மிகு ஓதி வைத்த விநாயகர் , அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் , அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோயில் , அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு யோகநரசிம்மர் திருக்கோயில் என எண்ணிலங்காத கிராம தேவதைகள் நம் குலம் காக்க தோன்றி வேண்டிய அனைவருக்கும் வேண்டிய வரங்களை தந்தருளி காத்து வருகின்றன.
இவ்வூரின் மத்தியில் அன்னை பார்வதி தேவி மகா மாரியம்மனாக அவதாரம் எடுத்து அருள்பாலித்து வீற்றிருக்கிறார். மக்களுக்கு அம்மை நோய் வராமல் காத்தல் , கொரோனா காலத்தில் கொரானா தாக்காவண்ணம் அனைத்து பக்தர்களையும் காத்து வந்தார். தொற்று நோய்கள் வராமல் காத்து கோடைக்காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் வெப்ப நோய்களான அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுத்து மக்களை காக்கின்றது .
நோய்களை தீர்க்கக்கூடிய கசப்பு சுவையுடைய வேப்பமரத்தினை தல மரமாக கொண்டுள்ளது. இத்திருக்கோயில் பிரகாரத்தில் பரிவாரத் தெய்வங்களான அருள்மிகு வள்ளி தெய்வாணை சமேதராக அருள்மிகு சுப்ரமணியன் , பேச்சாயி அம்மன் ஆகிய தெய்வங்கள் வீற்றிருக்கின்றது .