Screen Reader Access     A-AA+
அருள்மிகு செண்பகாரணேஸ்வரர் திருக்கோயில், வைகல், வைகல் - 612201, மயிலாடுதுறை .
Arulmigu Jambugeswarar Temple, Vaigal, Vaigal - 612201, Mayiladuthurai District [TM019283]
×
Temple History

தல வரலாறு

திருவைகல் மாடக்கோயில் தலச்சிறப்புகள் இத்தலம் மயிலாடுதுறை கும்பகோணம் இருப்பு பாதையில் ஆடுதுறை புகைவண்டி நிலையத்திற்கு தெற்கே 6 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து வடமட்டம் செல்லும் பேருந்துகளில் ஏறி பழியஞ்சியநல்லூரில் இறங்கி நாட்டார் வாய்காலைக் கடந்து தெற்கே 1 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களில் இது 33-வது தலம். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவைச் சார்ந்தது இக்கிராமம் வைகல் என்பது ஊர்பெயர் வைகல் என்னும் ஊரில் மாடக்கோயில் அமைப்பில் விளங்குவதால் இத்தலம் வைகல் மாடக்கோயில் என வழங்கப்படுகிறது. வை-குறுமை, கல்-மலை சிறிய மலைபோல் அமைந்த செய்குன்றின்மேல் அமைந்த மாடக்கோயில் என்பது இத்தலப்பெயரின் பொருளாகலாம்....