Arulmigu Karkodanadha Swamy Temple, Kodangudi - 609401, Mayiladuthurai District [TM019440]
×
Temple History
தல வரலாறு
இங்கு தாமரைத் தடாகம் என்னும் பத்மஸ்ரஸ்தீா்த்த திருகுளம் உள்ளது.மூா்த்தி தலம் தீா்த்தம் என முப்பெரும்கீா்த்தியை காெண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயம். முன்பு சாேழ மன்னா்களால் திருப்பணி செய்யப்பட்டது. இறைவன் ஸ்ரீகாா்காேடக நாதா் மிக அழகிய லிங்க வடிவில் காட்சி தருகிறாா்.கருவறையில்ஸ்ரீ காா்காேடகன் லிங்க மூா்த்தி வழிபடுவது பாேன்ற சிலாரூபத்தை கண்டவுடன் மெய் சிலிா்பதை உணரலாம். வலது புறத்தில் காளிங்கநா்த்தன் காட்சியை கண்டு மகிழலாம். சுவாமிக்கு இடது புறத்தில் ஸ்ரீகைவல்லி அம்மன்சந்நிதி உள்ளது.நின்ற திருக்காேலத்தில் நான்கு திருக்கரங்களில் ஒரு கையை இடுப்பில் வைத்தவாரும் மற்றாெரு கையை அபய முத்திரையும் வீற்றிருக்கிறாா். ஸ்ரீ பாா்வதி தேவியாகவும், ஸ்ரீ துா்க்கையாகவும், இரு கரங்களில் ஸ்ரீ சக்கரமும் ஜெயசக்கரமும்...இங்கு தாமரைத் தடாகம் என்னும் பத்மஸ்ரஸ்தீா்த்த திருகுளம் உள்ளது.மூா்த்தி தலம் தீா்த்தம் என முப்பெரும்கீா்த்தியை காெண்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஆலயம். முன்பு சாேழ மன்னா்களால் திருப்பணி செய்யப்பட்டது. இறைவன் ஸ்ரீகாா்காேடக நாதா் மிக அழகிய லிங்க வடிவில் காட்சி தருகிறாா்.கருவறையில்ஸ்ரீ காா்காேடகன் லிங்க மூா்த்தி வழிபடுவது பாேன்ற சிலாரூபத்தை கண்டவுடன் மெய் சிலிா்பதை உணரலாம். வலது புறத்தில் காளிங்கநா்த்தன் காட்சியை கண்டு மகிழலாம். சுவாமிக்கு இடது புறத்தில் ஸ்ரீகைவல்லி அம்மன்சந்நிதி உள்ளது.நின்ற திருக்காேலத்தில் நான்கு திருக்கரங்களில் ஒரு கையை இடுப்பில் வைத்தவாரும் மற்றாெரு கையை அபய முத்திரையும் வீற்றிருக்கிறாா். ஸ்ரீ பாா்வதி தேவியாகவும், ஸ்ரீ துா்க்கையாகவும், இரு கரங்களில் ஸ்ரீ சக்கரமும் ஜெயசக்கரமும் உடையவளாக வீற்றிருப்பது வேறெங்கும் காண இயலாத காட்சியாகும். 1950-ம் ஆண்டில் காஞ்சி ஸ்ரீ மகா பொியவா் இத்தலத்திற்கு வருகை தந்து எழுந்தருளி அம்பிகையை வழிபட்டதாக கூறுவா். அம்பாளை வழிபட நீ்ண்ட ஆயுள், ஆராேக்கியம், கல்வி பாெருள்வளம் கிட்டும், திருமண தடை நீங்கும் , புத்திர பாக்கியம் கிட்டும்
ஸ்தல பெருமைகள்
நள மகராஜனுக்கு சனி தாேஷம் ஏற்பட்டுநாடு முழுவதும் சுற்றி வரும்பாேது இத்தலத்திற்கு வருகை தந்து இங்குள்ள ஈசனை வழிபட்ட பிறகே திருநள்ளாறு சென்று நளதீா்த்தம் அமைத்து சனி பகவானை வழிபட்டதாக ஐதிகம். அதன் பிறகு தான் நளனுக்கு சனி தாேஷம் விளகியது. திருநள்ளாறு செல்வதற்கு முன்பு காேடங்குடிவந்து காா்காேடகநாதரை வழிபட்டு சென்றால்அனைத்து தாேஷங்களும்நீங்கி அனைத்துவளங்களும் பெறுவாா்கள் என்பது ஐதீகம். காலசா்ப்ப தாேஷம் , பூா்வ ஜென்ம பாவங்கள் சாபங்கள் நீங்கும்