Screen Reader Access     A-AA+
அருள்மிகு அமிர்தநாராயணப்பெருமாள் திருக்கோயில், Thirukadaiyur - 609311, மயிலாடுதுறை .
Arulmigu Amrtha Narayana Perumal Temple, Thirukadaiyur - 609311, Mayiladuthurai District [TM020051]
×
Temple History

தல வரலாறு

திருத்தல வரலாறு தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதிதேவியின் அருள் இல்லாததால் தான் இவ்வாறு மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை கழற்றி, அவற்றைப் பார்வதிதேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார். இதனை அறிந்த ஒரு அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான். சாகாவரமும் தேவபலமும் பெற்றான். ...

தல பெருமை

தலச்சிறப்பு ராமானுஜர் வழிபட்ட தலம். அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரரை தரிசித்த பிறகு, அமிர்த நாராயண பெருமாளையும் தரிசனம் செய்தால் தான், திருக்கடையூர் வழிபாட்டு பலன் முழுமையாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. ராகுகேது பரிகார தலமாகவும் கருதபடுகிறது.