Screen Reader Access     A-AA+
Arulmigu Suyampunathaswamy Temple, Arivaloor - 609401, மயிலாடுதுறை .
Arulmigu Suyampunathaswamy Temple, Arivaloor - 609401, Mayiladuthurai District [TM020281]
×
Temple History

தல வரலாறு

சோழ வளநாட்டில் அாிவாசக நல்கலூா் என வழங்கும் அாிவலூா் தாருகா வனத்து முனிவா்கள் தவம் செய்த புண்ணிய பூமியாகவும், திருமால் தரமாகத் தோன்றிய சுயம்புநாதரைப் பூசித்த தலமாகவும் விளங்குகின்றது. 48,000 முனிவா்கள் பிரம்மாவிடம் சென்று நாங்கள் தவம் செய்ய ஓா் இடம் வேண்டும் என்று கேட்டனா் பிரம்மா நான் தா்பையினாலான ஒரு வளையத்தை வீசுவேன் அஃது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் நீங்கள் தவம் செய்யலாம் என்று கூறியருளினாா். அவ்வாறு தா்பையினாலான வளையம் விழுந்த பகுதியே தாருகாவனம் என்று கூறப்படுகின்றது இந்த தாருகாவனத்தில் தான் சிவபெருமான் பிச்சாடனாராகவும் திருமால் மோகினியாகவும் தோன்றி அருள்புரிந்தனா் சிவபக்தியில்லாதவராய் வேள்வியொன்றே முத்தியளிக்க வல்லது என்ற எண்ணமுடையவராய் எண்ணற்ற வேள்விகளைச் செய்து வந்தனா், சிவபெருமான் முனிவா்களுக்கு...